பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோயாவாம் தீவினையே

131



ஏதாவது கைத்தொழிற் பேட்டையோ கல்விச் சாலையோ அமைக்கலாம் என எண்ணினேன். என் முயற்சி ஒரளவு வெற்றியும் தந்தது. முக்கியமாக உள்ள சில அன்பர்கள் தாமே முன்வந்து, குறித்த ஒரு சிறு விலக்குத் தத்தம் சமுதாய நிலத்தை எனக்கு எழுதித் தந்துவிட்டனர். மற்றவை. வாங்கிய பிறகு அரசாங்க நிலத்தையும் பெற்றுத் தொடர்ந்து செம்மைப்பணி ஆற்றத் திட்டமிட்டேன். எனினும் அந்தப் பணி இன்னும் தொடங்கப் பெறவில்லை. என் ஆயுட் காலத்துக்குள் அப்பணியைத் தொடங்கி நடத்துவேன் என்ற எண்ணத்தோடு வாழ்ந்து வருகின்றேன். அதற்கிடையில் தற்போது சென்னையிலும் இங்கே ஏர்க்காட்டிலும் வேறு வகையான பணிகளை என் சொந்த முயற்சியில் தொடங்கத் திட்டமிட்டுச் செயலாற்றவும் தொடங்கியுள்ளேன். இந்நிலையில் அந்தப் பாலாற்றங்கரைப் பணி எப்போது தொடங்கப் பெறுமோ அறியேன்.

மகன் பிறந்த மகிழ்ச்சியில் எங்களூர்க் கோயில் விழாவாற்றியது மட்டுமின்றி எங்கள் குலதெய்வமாகிய ஆட்டுப் புத்துார் அம்மனுக்கும் விழா எடுத்தோம். எந்தச் சிறப்பு நடந்தாலும் அத்தெய்வத்தை வழிபடாது நாங்கள் செயலாற்றுவதில்லை. கடைசியாகச் சென்ற ஆண்டு என் மகனின் மணத்தின் போதும் அத்தெய்வத்திற்கும் வழிபாடாற்றினேன். நான் அங்கம்பாக்கமாயினும் எங்கள் வீட்டை 'ஆட்டுப்புத்துாரார் வீடு' என்றே அழைப்பர். ஒருவேளை எங்கள் முன்னோரில் யாராவது அவ்வூரிலிருந்து இங்கே வந்திருப்பார்கள் என எண்ணினேன். அங்கேயும் எங்கள் உறவினர் இருப்பதால் சில காலங்களில் செல்வதுண்டு. பொதுவாக இவ்வாறு பலவகையில் சமய நெறியிலும் தெய்வப்பணியிலும் காலங்கழித்து வந்த நான் மேலே படிப்பதைப் பற்றியும் சிந்தித்து வந்தேன். எப்படியும் அந்த ஆண்டில் 'பீ. ஓ. எல்.' தேர்வு எழுதி வெற்றி பெற வேண்