பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சென்னை வாழ்வின் தொடக்கம்

137



வாலாஜாபாத் இந்துமத பாடசாலைக்கும் எனக்கும் நான் பயின்ற அந்த நாளில் இருந்து (1925) இன்றுவரை தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது. ஏதோ படித்தோம் விட்டோம் என்று இல்லாமல், நான் அப்பள்ளியில் ஓர் அங்கமெனப் பலரும் எண்ணத் தக்க வகையில் நான் அப் பள்ளியொடு தொடர்பு கொண்டிருந்தேன். இடையில் ஓராண்டு அப்பள்ளியில் பணியாற்றியதையும் அப்போது நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் இந்த நூலில் முன்னரே குறித்துள்ளேன். அதற்குப் பிறகும் என் தொடர்பு பள்ளியில் பிணைத்தே இருந்தது.

அப்பா அவர்கள் பள்ளிக்குப் பார்வையிட யாரை அழைத்து வந்நாலும் (அவர்கள் பெரும்பாலும் சென்னையிலிருந்து வருபவராதலால்) என்னையும் அவர்களோடு ஏதாவதொரு 'காரில்' வரச் சொல்லுவார்கள். வேறு பிறவிடத்திலிருந்து வந்தாலும் எப்படியும் என்ன அழைத்துச் சென்று விடுவார்கள். பின் நான் புதுப்பட்டங்கள் பெற்ற போதும் பதவி உயர்வுகள் பெற்ற போதும் அவர்கள் என்னைப் பாராட்டத் தவறவில்லை. மேலும் பள்ளியின் பழைய மாணவர் மன்றம் அமைத்து, அதன் தலைவராக என்னை அமைத்து வாழ்த்தினர்கள். நான் ஐதாராபாத் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவனாகச் சென்றபோது (1966) என்ன வாழ்த்தி அனுப்பினார்கள். ஆனால் நான் 1967ல் திரும்பி வந்த போது அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்தார்கள். அவர்தம் கடைசிக் காலம்வரையில் அவர்கள் என்னைத் 'தம்பி', 'தம்பி’ என அழைத்துப் போற்றிய தன்மையினை என்னால் மறக்க முடியாது.

இடையில் மறைந்த என் அன்னைக்கு நிலைத்த நினைவாக ஏதேனும் கல்வி, கைத்தொழில் பற்றிய நிலையம் ஒன்று தொடங்க வேண்டுமென்ற எண்ணம் அன்னையர் மறைந்த நாளிலிருந்து என் உள்ளத்தில் ஊசலாடிக் கொண்டிருந்தது. அதற்கென முன் காட்டியபடி புளியம்பாக்கத்தில் இரெயி