பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

காஞ்சி வாழ்க்கை



லுக்கும் கற்பாதைக்கும் அடுத்து, பாலாற்றங்கரையினுள் சமுதாய நிலத்தை வாங்க முயன்றேன். பலர் முன்வந்து குறைந்த விலையில் சுமார் நான்கு ஏக்கர் நிலத்தைக் கொடுத்தனர். இன்னும் மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. அதையும் வாங்கி, பக்கத்திலுள்ள அரசாங்கத்துக்குரிய எட்டு ஏக்கர் நிலத்தையும் கேட்டு வாங்கி, பதினைந்து ஏக்கரில் வள்ளியூர் என்ற ஊர் அமைத்து ஒரு கல்வி நிலையமும் தொழில் நிலையமும் அமைக்கத் திட்டமிட்டேன். பலர் வாலாஜாபாத்தில் மேற்கே மாசிலாமணி முதலியார் கிழக்கே நான் -ஆக இருவரும் கல்விப்பணி ஆற்றுவது ஊருக்கே நல்லது என்றனர். இந்த நிலையிலும் இதற்கு மருந்தாக அப்பா அவர்கள் இந்த யோசனையைக் கைவிடல் வேண்டி, அவர் பள்ளியில் சில பொறுப்புக்களை ஏற்க அழைத்திருக்கலாம். எப்படியோ, அப்பணி இன்றும் அந்த அளவிலேயே உள்ளது. என்றாவது ஒருநாள் அப்பணி நிறைவேறும் என்ற உளத்தோடு உள்ளேன். எனினும் இதற்கிடையில் என் அன்னையின் பெயரால் சென்னை அண்ணாநகரில் அமைத்துள்ள கல்விக்கூடம் (1968-ல் தொடங்கப்பெற்றது) நன்கு வளர்ந்து என் அன்னையின் பெயரை என்றும் வாழவைக்கும் நிலையில் ஆக்கம்பெற்று வருவதை எண்ணி மகிழ்கின்றேன்.

என்னுடைய வாழ்வின் திருப்பங்கள் நேரும்போது நான் இறைவனையே துணையாகக் கொள்ளுவது மரபு, காஞ்சி வாழ்க்கையையும் ஊர் வாழ்க்கையும் ஒத்துவரா நிலையில் சென்னை பச்சையப்பர் கல்லூரியின் தமிழாசிரியர் தேவை பற்றிய விளம்பரம் கண்டேன். அதற்கென விண்ணப்பம் செய்ய நினைத்தேன். எனினும் அதற்குரியார் யாரையும் நான் அறியேன் ஆதலாலும் அதற்குரிய வகையில் என்னை ஆற்றுப்படுத்தி வழி காட்டுவார் யாரும் இல்லை என்ற நி லை யி லும் செய்வதறியாது திகைத்தேன். சென்னைக்கு ஒருதிங்களில் சுமார் இருபது முறை சென்று வந்திருப்பேன். ' எனினும் அந்தச் சூழலுக்கிடையில் நான் இறைவனை முற்றும் நம்பிய காரணத்தால் அமைந்த சூழலே