பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை நகரில்

33


‘சொக்கா’யைப் பொத்தானும் இல்லாது போட்டுக்கொண்டு, மேலே ஒரு புது அங்கவத்திரத்தை இட்டுக்கொண்டு, மெல்லிய கீழாடையுடன் உச்சிக் குடுமியுடன் சிதம்பரத்திலிருந்து வந்துகொண்டிருந்தார். தண்டியலங்காரமும் வேறு இலக்கணங்களும் அவர் எங்களுக்குச் சொல்லித்தந்தார். நூலை அவர் பிரித்துப் பார்த்ததே கிடையாது. ஆனால் நூலில் உள்ளதைக் காட்டியதோடு, அதில் இல்லாத பல விளக்கங்களும் வேறுபிற மேற்கோள்களும் வரிசையாக வந்துகொண்டே இருக்கும். அவர்தம் இலக்கண வகுப்பு யாருக்கும் எப்போதும் சலித்தது இல்லை. இலக்கியத்திலேயும் அவர் சிறந்தவர். அவரும் அவரது முன்னோரும் திருவாவடுதுறையில் பரம்பரை வித்துவான்களாக இருந்த ஒன்றே அவர்தம் ஆற்றலையும் தெளிவையும் தூய சிந்தையும் காட்டும். அவர் ஒழுக்க சீலர்— உயர்ந்த பண்பாளர்.

கந்தசாமியார் மற்றொரு இலக்கணக் கடல். சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் பிற உரையாசிரியர்களும் அவரிடம் சிறைப்பட்டனர். தூய துறவு வாழ்வை மேற்கொண்ட செந்தண்மையாளராகிய அவர்கள் எங்கட்கு இலக்கண இலக்கியங்களை நடத்தினர். புரியமுடியாத நுண்ணிய பகுதிகளையெல்லாம் மிக எளிய வகையில் புரிய வைக்கும் திறன் அவர்களுடையது. எனினும் அவர் தம் சாதாரண நடையும் பேசும். நடையும் சற்றே வேகம் வாய்ந்தவை. அவர் சற்றே ஒதுங்கியே வாழ்வார். ஆகவே மாணவர் ஏதேனும் அறியாது கேள்வி கேட்பின் உடனே வெகுள்வார். அவ்வாறு உண்டான ஒரு வெகுளியின் காரணமாகவே நான் இடையில் அண்ணாமலையில் பயில்வதை நிறுத்தி வந்துவிட்டேன். அவர் என்னிடம் அன்பு பொழிந்தார் என்றே சொல்வேண்டும். அவர்தம் துறவு உண்மைத் துறவாகும்.

இவர்களைத் தவிர சிவப்பிரகாசர், கல்யாணசுந்தரம் பிள்ளை, பலராமையா, பழநியப்பப்பிள்ளை போன்ற நல்ல

3