பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை நகரில்

39


களைக் காண வாய்ப்பு இல்லை. பல ஆண்டுகள் கழித்து அவர்தம் இருக்கையினையும் வாழ்க்கைமுறையும் அவர் தம் வாழ்வின் இழப்பையும் பிற நிலையையும் நோக்கும்போது என் உள்ளம் என்னை அறியாது அவர்கள் பால் வெறும் உயிர் இரக்கம் காட்டும் வகையில் அமைந்தது; அவ்வளவே!

பல்கலைக் கழகத்தில் பயிலும்கால் அடிக்கடி ஊருக்கு வருவேன். அவ்வாறு ஒருமுறை வந்தபோது சென்னை சென்றேன். அப்போது எனக்குத் தேவையான சில நூல்கள் வாங்குவதற்காக டாக்டர் சாமிநாதையர் வீட்டிற்குச் சென்றேன். நடையில் உட்கார இடம் இருந்தது. உள் வாசலில் பாத்திரங்கள் துலக்கி வைக்கப்பெற்றிருந்தன. ஐயர் அவர்கள்–எழுபத்தைந்து மேல் வயதிருக்கும்—அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து உள்ளே வைத்து வந்தார். என்னை நடையிலேயே உட்காரப் பணித்தார். எல்லாவற்றையும் முடித்துவிட்டு, என்னையும் அழைத்துக்கொண்டு மேலே சென்றனர். என்னை உட்காரவைத்து, ‘தம்பி! என்ன நினைக்கிறாய்?’ என்றார். நான் எது பற்றி என்று அறியாது திகைத்தேன். என் திகைப்பை உணர்ந்த. ஐயரவர்கள் ‘நான் பாத்திரங்களை எடுத்து வைத்ததைப்பற்றி என்ன நினைக்கிறாய்?’ என்று கேட்டு, என் பதிலுக்குக் காத்திராமல் அவர்களே பேசத் தொடங்கினர். நம் வீட்டு வேலை எதுவாயினும் நாம் செய்யப் பின் வாங்கக்கூடாது எனவும் நாம் பணி செய்வதில் இழிவு இல்லை என்று கூறினார். மேலும் பல வகையான அறிவுரைகளை அந்த இளம் வயதில் என் உளங்கொள்ளுமாறு எனக்குக் கூறினர். அதுவரை எதிரில் உட்கார்ந்து தம்மை மறந்து ஏட்டில் மூழ்கியிருந்த திரு, ‘கி.வா.ஜ.’ அவர்கள் என்னை யாரென்று கேட்டார். பிறகு என்னைப்பற்றிக் கூறிவிட்டு, வேண்டிய நூல்களைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டேன். பிறகு ஐயர் அவர்கள் வாழ்ந்த வரையில் சென்னைக்குச் சென்ற போதெல்லாம் அவர்களைக் கண்டு அவர்தம் வாழ்த்தைப் பெற்று வந்தேன். பின் அவர் மகனாரும் அவர் தம் பேரப் பிள்ளையாகிய இன்று வாழும்