பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்துமத பாடசாலை

59


அன்றே அந்த இடத்தை முழுதும் பார்வையிட்டு, மறு நாளே எல்லா மாணவர்களைரும் அப்புது இடத்துக்குப் புகுமாறு பணித்தார்கள். அவர் தம் அன்பின் திறனே அப்போது என்னால் உணர முடிந்தது.

ஓராண்டு இந்துமத பாடசாலையில் வேலை செய்த போது பல அறிஞர்கள் எனக்கு அறிமுகமானர்கள் என்றேன். அவருள் இன்று ஐதராபாந்தில் இருக்கும் திரு. மணி கோடிஸ்வர முதலியார் ஒருவர். அவர் அதுகாலை சென்னை கோவிந்த நாயகர் இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார் செயலாற்றலும் பேச்சுத்திறனும் பெற்றவராக விளக்கினர். அவர் அடிக்கடி பள்ளிக்கு வருவார்....அப்பாவின் உறவினரும் ஆவர். அவர் வரும்போதெல்லாம் என்னை மேலே பயிலுமாறு ஊக்குவார். எனக்கு நல்ல எதிர்காலம் இருக்தின்றது என்றும் படியாமல் வீணே காலங் கழிக்கக் கூடாது என்றும் சென்னையில் பல்கலைக்கழகத்துக்குத் தனியாகப் படித்துச் செல்லலாம் என்றும் கூறி அவ்வாறு படிப்பதற்கு வேண்டிய வழித்துறைகளில் எனக்கு உதவுவதாகவும் வாக்களித்தார். அவர் சொற்படி நான் படித்து உயர்ந்தபோது என் வளர்ச்சியைப் பாராட்டினார். ஐதராபாத் உஸ்மானியப் பல்கலைக்கழகப் பேராசிரியனாகத் தமிழக அரசாங்கம் என்னை அனுப்பியபோது, அங்கே என்னே வரவேற்று விருந்தளித்துப் பல பெரியவர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். என் வளர்ச்சியை விரும்பும். நல்லவர்களில் ஒருவராக அவர் உள்ளார்.

இவ்வாறே எனக்கு அறிமுகமான பலரும் எனக்கு அறிவுரைகூறி, மேலே படிக்கவேண்டும் என்று வற்புறுத்தினர். எனது அன்னையாருக்கும் நான் வீட்டிலேயே இருந்து படித்து பட்டம் பெறுவதில் கருத்துவேறுபாடு இல்லை. எனவே எனது ஓய்வுநேரங்களில் சென்னைப் பல்கலைக்கழகப் பாடத்திட்ட அடிப்படையில் அமைந்த சில இலக்கிய இலக்கண நூல்களைப் பயிலத்தொடங்கினேன்,