பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்துமத பாடசாலை

61


யிற்று, அனைத்தையும் துறந்து எங்காவது சென்றுவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

ஒரு நாள் விடியலில் எழுந்து அம்பட்டன் வீட்டிற்குச் சென்றேன். குடுமி எனக்கு நிறைய இருக்கும். அனைத்தையும் நீக்கி மொட்டை அடித்துக்கொண்டேன். ஆற்றில் மூழ்கி வீட்டிற்கு வந்து உணவு உண்டேன். பிறகு என் கையில் உள்ள சிறு தொகையை எடுத்துக்கொண்டு, வாலாஜாபாத் சென்று மறுநாள் வருவதாக அன்னையிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். மேலே ஒரு துண்டு, இடுப்பில் ஒரு வேட்டி, மடியில் சிறு தொகை, சில தாள் ஒரு எழுதுகோல் இவற்றோடு புறப்பட்ட நான் நேரே திருத்தணிகைக்குச் சென்று எங்கள் குலதெய்வமாகிய முருகனை வழிபட்டு அவனிடம் வரம் வாங்கிக்கொண்டு பிறகு அவன் காட்டிய திசையில் செல்ல முடிவு செய்தேன். தணிகை முருகன் எங்கள் குடும்பத்தின் தோன்றாத் துணையாய் நின்று எல்லாக் காலத்திலும் அருள் செய்யும் நிலையினை நினைந்தேன்;வாய் அவன் புகழ் பாடிற்று.

ரெயிலில் டிக்கெட் எடுத்து உட்கார்ந்தேன். வண்டி நகரத் தொடங்கிற்று. என் உள்ளமும் எண்ணாததெல்லாம் எண்ணிற்று. இந்தத் துறவு நிலக்குமா? என்ற கேள்வி பிறந்தது. ரெயிலில் எனது முன்பலகையில் ஒரு குடும்பம் திருப்பதிக்குப் புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது; இளந்தம்பதிகள் - இரு குழந்தைகள் - உடன் வந்த மூதாட்டி. இவர்கள் குடும்பம் நல்ல சமயப்பற்றுடையதாகத் தெரிந்தது. என்னைச் சிறிதுநேரம் உற்று நோக்கிய அவர்கள் என்னிடம் பேசத்தொடங்கினர். நான் பெரும்பாலும் கண் மூடிக்கொண்டு - முருகன் புகழ் பாடிக்கொண்டு - இடையிடையே கண்ணீர்விட்டுக்கொண்டு கசிந்து சென்றேன். என்னைப் பற்றி என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. பேசினர் - யார் பேசினர் என்பது நினைவில்லை. என்னை உண்மைத் துறவி என்றே நம்பினர். நானும் துறவிதான்