பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

காஞ்சி வாழ்க்கை


என்றும் தணிகைக்கு வழிபடச் செல்லுகிறேன் என்றும் அடுத்து எங்கே செல்வேன் என்பது எனக்கே தெரியாது என்றும் எனக்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிரே' என்றும் சொன்னேன். அவர்கள் இந்த இளம் வயதில் மொட்டை அடித்துத் துறவி என நின்ற என் கோலத்தில் ஏதேனும் தெய்வஒளி கண்டார்களோ என்னவோ நானறியேன். குழந்தைகளே என் காலில் கிடத்தி வாழ்த்த வேண்டினர். அவர்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடித்துக் காது குத்துவதற்காகத் திருப்பதிக்குச் செல்வதாகக் கூறினர். என்னையும் அவர்களுடனேயே வருமாறு கேட்டுக்கொண்டனர். எனினும் நான் முருகனை முதலில் கண்டபிறகுதான் பிற இடங்களுக்கு வரமுடியும் என்று சொல்லிவிட்டேன். எனவே அவர்கள் மேலும் வற்புறுத்தாமல் அவர் ஊர் முகவரி முதலியவற்றைச் சொல்லி, அங்கேயே வந்து தங்கி மடம் அமைத்துக்கொண்டு இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். (என் பிற்கால வாழ்விலும் எங்கள் மரபுடன் தொடர்பு கொண்ட ஒரு மடத்துக்குத் தலைவனாக இருக்குமாறு என் நண்பர்கள் வற்புறுத்தினர்கள். எனினும் அப்போதும் நான் அந்த வாழ்வினை மேற்கொள்ளவில்லை). என் உள்ளத்தில் உண்மையில் போ ரா ட் ட ம் நிகழ்ந்தது. கையில் வைத்திருந்த தாளில் எழுது கோலால் அவர் தம் முகவரியை வாங்கிக்கொண்டேன். இறைவன் வழிகாட்டினால் அப்படியே வருவதாகவும் வாக்களித்தேன். நான் இறங்குமுன் அவர்கள் சிற்றுண்டி உண்டனர். எனக்கும் பக்தியோடு அதில் ஒருபகுதி தந்தனர். நானும் மறுக்காமல் ஏற்று உண்டேன். அவர்கள் என்ன நினைத்தார்களோ! நான் தணிகையில் இறங்குமுன் என்னிடம் ஒரு ரூபாய் காசைத் தயக்கத்தொடு நீட்டி, வழிச் செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். நான் புன்சிரிப்போடு 'வேண்டாம்' என்று சொல்லி, 'இறைவன் தேவையைத் தருவான்’ என்று அவன் மலையைக் காட்டினேன். அந்நேர வேளையில் இரெயில் அவன் சன்னதிக்கு நேராகக்