பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

காஞ்சி வாழ்க்கை



மறுத்த போதிலும் ஒருதிங்கள் தானே என இசைந்தனர். நான் அங்கே சென்று அந்த ஒரு திங்களிலும் மெளன சுவாமிகள் மடத்தில் தங்கி, நாள்தோறும் அண்ணாமலை நகர் சென்று அறியாதனவற்றைக் கேட்டு வந்தேன். அதுபோது ஒருநாள் நாவலர் சோமசுந்தர பாரதியார் கவி அரசர் சுப்பிரமணிய பாரதியாரைப் பற்றிப் பேசிய பேச்சைக் கேட்டு, அதே மயக்கத்தில் அருகில் இருந்த ஒரு அறையில் தங்கி, பாரதியின் வாழ்க்கையைப் பாட்டாக 'பாரதி வாழ்வு' என்று ஐம்பது பாட்டில் எழுதி முடித்தேன். அதுவே எனது முதல் நூலாகவும் வெளிவந்தது.

அண்ணாமலையில் பல ஐயங்களைப் போக்கிக் கொண்ட நான் சென்னையில் தேர்வு எழுத வந்தேன். எனக்குச் சென்னையில் பத்து நாட்கள் தங்க உதவுபவர் யார் எனச் சிந்தித்தேன். அப்போது லா. தி. பஞ்சாட்சர முதலியார் அவர்கள் மாம்பலத்தில் தமது மக்கள் படிப்பின்பொருட்டு வந்திருந்தார். என்னே அவர் வீட்டிலேயே இருக்கப் பணித்தார். என்னொடு மற்றொரு நண்பரும் இருந்தார், அந்த அன்னயார் இருவரையும் தம் மக்களே போன்று ஏந்தி, வேண்டுங்கால் வேண்டும் உணவளித்து தேர்வு எழுத நாள்தோறும் வாழ்த்தியனுப்புவர். நான் படித்த வலத்தினைக் காட்டலும் அந்த அன்ளேயார் உண்பித்த உணவு வலத்தாலும் வாழ்த்தின் திறத்தாலுமே தேர்வில் சிறக்க வெற்றி பெற்றேன் என்பது உறுதி. அவர்தம் கான்முளைகளும் இன்றும் என்னொடு இயைந்து அன்புடையவர்களாகவே உள்ளனர். இவ்வாறு எப்படியோ பல இன்னல்களுக்கும் கொடுஞ் சூழல்களுக்கும் இடையில் பயின்று வித்துவான் தேர்வில் வெற்றிபெற்றேன். இச்செய்தி என் அன்னையர் இருவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. இந்த இன்பத்தில் நாங்கள் பிற அனைத்தையும் மறந்து அமைதியில் வாழ்ந்தோம்.