பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சி வாழ்க்கைத் தொடக்கம்

79


பாடம் பயின்றார்கள்கள் என்றேன். அவருள் உயர் வகுப்பில் பயிலும் இரண்டொரு மணவியரும் இருந்தனர். அவர்கள் அவ்வாறு வந்து பயிலும் போது, எங்கள் ஊரில் எங்கள் தெருவில் இருந்து ஒருவர் என்னைக் காணவந்தார். அவர் அந்தப் பெண்களைப் பார்த்ததும் என்ன எண்ணினாரோ! நேரே ஊருக்குச் சென்று ‘நான் கெட்டுவிட்டேன்’ என்று என் அன்னையிடமே கூறிவிட்டார். அவர் தனக்கென இருக்கும் மனைவியைவிட்டு, பிறர் மனைவியர் மேல் மனம் வைத்துச் சுற்றித் திரிபவர். வயது ஐம்பதுக்கு மேலாகியும் அந்த வாழ்வில் இன்பம் கண்டவர். என் அன்னையார் அவர் சொல்லை அப்படியே நம்பாவிடினும் நான் போன போது கண்டித்தார்கள். நான் ‘அவரவர் புத்தி அவருக்கு’ என்று கோள் சொல்லியவரைப் பற்றிக் குறிப்பாகக் காட்டினேன். என் அன்னையாரும் உடனே அவரிடம் நான் சொல்லியதைச் சொல்விவிட்டார்கள். அது முதல் அவர் இறக்கும் வரையில், என்னிடம் மரியாதையாகவே நடந்து கொண்டார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

நிற்க, இந்த நிகழ்ச்சியும் செயலும் என் அன்னையார் உள்ளத்தில் புது வேகத்தை உண்டாக்கிவிட்டது. நான் ஒருவேளை மறுபடியும் உண்மையிலேயே வேறு யாராவது பெண்ணை மணம் செய்துகொள்வேனோ என அஞ்சினார்கள். முன்னமே ‘காஞ்சி’க்கு அனுப்ப அஞ்சிய அன்னையார் இதற்குப்பின் வெகு வேகமாக எனக்கு மணம் செய்து வைப்பதில் முயன்றார்.

அதற்கேற்ப, காஞ்சியிலும் என் மாணவ நண்பர் ஒருவர் போக்கு என்னைத் திகைக்க வைத்தது. அவர் தற்போது இல்லை. படிப்பு முடியும் முன்பே மறைந்துவிட்டார். ஒன்பதாம் வகுப்பில் பயிலும்போதே அவருக்கு இருபதுக்கு மேல் வயது இருக்கும். அவருக்கு ஏற்ப நான் தங்கியிருந்த வீட்டில் ஒருவர் அவருக்கு உறவானார் போலும், என்னொடு எனக்குத் துணையாக இருந்த அந்த மாணவர், அவருக்கும்