பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சி வாழ்க்கைத் தொடக்கம்

81

மணம் நடந்த அதேவேளையில் அந்த ஊரில் ஒருவீட்டில் ஓர் ஆண்மகவு பிறந்தது. அதன் தந்தை என்னிடம் ஈடுபாடு கொண்டமையாலோ ஏனோ அத்குழந்தைக்கு என் பெயரையே இட்டார். இது நெடுநாட்களுக்குப் பிறகே எனக்குத் தெரிந்தது. அவரோ மற்றவரோ அப்பெயர் பற்றி எனக்குக் கூறவில்லை. ஆயினும் சில ஆண்டுகள் கழித்து என் பெயரைப் பற்றிய ஆராய்ச்சி உக்கலில் வேடிக்கையாக நடைபெற்றபோது, அந்த உண்மை வெளியாயிற்று. என் பெயர் எங்கும் வேறுயாருக்கும் கிடையாது என வாதிட்டேன் நான். ‘பரமசிவம்’ ‘சிவானந்தம்’ ‘பரமானந்தழ்’ ‘ஆனந்தம்’ போன்று பலபெயர்கள் இருக்கலாம் என்றாலும், ‘பரமசிவானந்தம்’ என்ற முழுப்பெயர் யாருக்கும் கிடையாது என்றேன். அந்தப் பிள்ளையினுடைய தந்தையாரும் உடன் உட்கார்ந்திருந்தார். அவர் அமைதியாகத் சூழ் மகனுக்கும் அப்பெயரிட்டிருப்பதையும் காரணத்தையும் காட்டினார். எனது மணம் நடந்த அதேவேளையில் பிறந்தமையாலும் இளமையிலேயே தன் முயற்சியால் நான் முன்னுக்கு வந்துள்ளதாக அவர் கருதியமையாலும் அப் பெயரை இட்டமையைக் கூறினார். நான் என்னை இவ்வளவு பின்பற்றக் கூடியவர்களும் உளரா என வியந்தேன். மேலும் அவர் அப்போதே என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அப்பிள்ளையைக்காட்டி என்னை வாழ்த்துமாறு பணித்தார். நானும் உளமார வாழ்த்தினேன். அவர்— அந்தப் பரமசிவானந்தம் — தற்போது வடஆற்காடு மாவட் டத்தில் ஆசிரியப் பயிற்சிபெற்று ஒருபள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் என அறிகிறேன்.

பழங்கால மணமுறைப்படி எனது திருமணம் நடந்தது. மணம் நடைபெற்ற மறுநாள் வேடிக்கையாகப் பிள்ளை பெண்ணுக்கும் பெண் பிள்ளைக்கும் ‘நலங்கு’ வைத்தல் மரபு. அப்படியே எனக்கும் நடைபெற்றது. ஆனால் எதிர்பாராத வகையில் சடங்குகளில் ஒன்றாகிய ‘அப்பளம் தட்டும்’ நிகழ்ச்சியில் நான் அதிர்ந்துபோனேன். அப்பளத்தை

6