பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் அலைகள் :-தேர்தலும் தெளிதலும்

87


வும் இருந்தார். மேலும் அவர் அத்தொகுதி எம், எல். ஏ. வாகவும் இருந்தார் என எண்ணுகிறேன். எனவே அவரது சொல்லை மேலுள்ள இராசகோபாலாச்சாரி முதல் யாவரும் கேட்டனர். எனினும் நான் தனியார் பள்ளியில் பணியாற்றியமையால் என்னை அவர்கள் ஒன்றும் செய்ய இயலவில்லை.

ஒருநாள் ஒரு கூட்டத்தில் (வைகுண்ட பெருமாள் கோயில் அருகில் என எண்ணுகிறேன்) நான் தலைமை வகித்துப் பேசினேன். எனது நண்பர் மாகறல் திருநாவுக்கரசு என்பவர் என்னைத் தேடிக்கொண்டுவந்து, வீட்டில் நான் கூட்டத்துக்குப் போயிருந்ததைக்கூற, அங்கே வந்து வெளியே நின்று கொண்டிருந்தார். அவர் காஞ்சி நகராட்சியில் ஆசிரியப் பணிபுரிந்து வந்தார். கூட்டம் முடிந்ததும் அவரும் நானும் பேசிக்கொண்டே போனோம். அதற்குப் பிறகு ஒருசில நாட்களில் நகராட்சி ஆணையர்களிடமிருந்து அவர் ‘இந்தி எதிர்ப்பு’க் கூட்டத்தில் கலந்து கொண்டது தவறு என்றும் அவர்மேல் நடவடிக்கை எடுக்கப்பெறும் என்றும் கடிதம் வந்தது. அவர் சற்றும் அஞ்சவில்லை. எனினும் உத்தியோகம் அல்லவா! மேல் உள்ளவரிடம் வாதாடினார்–எழுதிக் காட்டினார். மேலதிகாரிகளுக்கு விண்ணப்பம் செய்தார். முடிவில் அவருக்கு ஓராண்டு உயர்வு ஊதியம் நிறுத்தப்பட்டேவிட்டது. கூட்டம் பற்றி எண்ணமே இல்லாது என்னைத் தேடிவந்த அவருக்கு வெளியில் நின்றிருந்தவருக்கு இந்தத் தண்டனை–ஆனால் அந்த அதிகாரி களால் என்னை ஒன்றும் செய்யமுடியவில்லை, காரணம் என் நிலை அன்று அப்படி.

திருநாவுக்கரசு அவர்களை நினைத்தபோது மற்றொன்றும் நினைவுக்கு வருகின்றது. அவரும் நானும் எப்போதும் இணைந்தே இருப்போம். எங்கள் இருவருக்கும் உரிய நண்பர் ஒருவர் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு இவரை அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது அவர் பஞ்சாயத்து பார்வை