பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் அலைகள் :- தேர்தலும் தெளிதலும்

89


செல்லலாம் என்றும் சொன்னேன். வற்றிய. வரண்ட காட்டில் முற்றிய மழை பெய்ததென அவர் மகிழ்ந்தார். காலையில் என் பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை கடிதம் எழுதித் திருநாவுக்கரசு அவர்கள் வழியே அனுப்பிவிட்டு நான் இரெயிலில் நண்பருடன் சைதாப்பேட்டைப் பயிற்சிக் கல்லூரிக்கு வந்து சேர்ந்தேன்.

அப்போது மணி 10க்கு மேலாகி இருந்தது, திரு. ஐயர் அவர்கள் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். நாங்கள் அவர் அறையில் காத்துக்கொண்டிருந்தோம். வகுப்பு முடிந்ததும் வந்தார். உலகம் சுற்றிப் புகழ்பெற்ற அந்த ஐயர் அவர்கள் என்னிடம் காட்டிய, பரிவு மறக்கற் பால தன்று. ‘எங்கே வந்தாய்?’ என்று கேட்டார், நான் எல்லாவற்றையும் கூறி அவர் விண்ணப்பம் செய்யாததையும் விளக்கினேன். அவர் அதை யெல்லாம் பொருட்படுத்தாது, ‘நீ ஏன் இதற்காக இவ்வளவு தூரம் வந்தாய்? இவரிடமே கடிதம் அனுப்பியிருந்தால் போதாதா ? நான் இவனை நிலநூல் பிரிவில் சேர்த்துக்கொள்கிறேன்’ என்று என்னிடம் கூறி, ‘உனக்குச் சம்மதமா?’ என்று அவரைக் கேட்டார். அவரும் ‘சரி’ எனத் தலையாட்டினார். உடனே ஐயர் அவர்கள் இவன் இங்கேயே இருக்கட்டும், நான் அடுத்த வகுப்பை முடித்து வந்து ஏற்பாடு செய்து கொள்ளுகிறேன், நீ போகலாம். என்று கூறிவிட்டு அடுத்த வகுப்பிற்குச் சென்றுவிட்டார். நான் நண்பரை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். வழிநெடுக அந்த அந்தணாளர் தம் அன்பையும் பண்பையும் பரிவையும் தெளிவையும் எண்ணி எண்ணி வியந்தபடியே நின்றேன். நண்பரும் பிறகு நிலநூற்பிரிவில் இடம் பெற்று அந்த ஆண்டிலேயே ஆசிரியப் பயிற்சியை முடித்து வெற்றி பெற்று அரசாங்கக் கல்வித்துறையில் பணி ஏற்றார். பிறகு அவர் தம் உழைப்பாலும் முயற்சியாலும் தமிழகக் கல்வித்துறையில் மிக உயர்ந்ததாகிய பதவியினையும் அடைந்தார். அவர் உயர்வை எண்ணி எண்ணி நான் மகிழ்ந்த காலமெல்லாம் பலப்பல. ஆயினும் அவர் உயர்ந்த