பக்கம்:காஞ்சி வாழ்க்கை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

காஞ்சி வாழ்க்கை


விற்குக் கல்லூரிச் சார்பில் போட்டி இடுமாறு அன்பர் பலர் வற்புறுத்தினர்; நான் மறுத்தேன். எனினும் அரசாங்மே–கவர்னர் நியமனத்தால் அக்குழுவிற்கு மூன்றுமுறை (ஒன்பது ஆண்டுக்கு) என்னை நியமித்தது. அவர்களுக்கு நன்றியுடையேன். உரிமை பெற்ற பின்பு முன்னைய ஆட்சியாளர்களும் இன்றைய ஆட்சியாளர்களும் சட்டசபைக்கு என்னைப் பலமுறை பல இடங்களுக்குப் போட்டி இடச் சொன்ன போதெல்லாம் இதே காரணம் காட்டியே விலகினேன். இதற்காக எனது அன்பர் - உடனிருந்த ஆசிரியர் திரு. க. அன்பழகன் அவர்கள் கூட என்னை ஒருமுறை கடிந்து கொண்டார்கள். அவர் ஒருமுறை (1957 என எண்ணுகிறேன்) சட்டசபைக்கு நின்றபோது என்னையும் உத்திரன் மேரூர்த் தொகுதியில் நிற்கக் கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். திரு. V. K. இராமசாமி முதலியார் போன்ற பெரியவர்களெல்லாம், பின் பல இடங்களுக்குச் சுலபமாக வரும் வகையில் என்னைப் போட்டி இடச் சொன்னார்கள். ஆயினும் அவர்கள் வேண்டுகோளையெல்லாம் மிகத் தாழ்மையோடு மறுத்துவிட்டேன் நான். இவ்வாறு இத் தேர்தல் விழா–வெற்றி–என் வாழ்நாளிலேயே ஒரு நிலைத்த கொள்கையை நான் மேற்கொள்ள உதவி செய்தது. அதைப் போற்றுவதன்றி வேறு என்செய வல்லேன்?

நான்கைந்து ஆண்டுகள் நான் மாவட்டக் கழக உறுப்பினனாக இருந்தேன். அதுபோது திருவாளர் முத்துரங்க முதலியார் அவர்களும் எங்களோடு அதே சபையில் உறுப்பினராக இருந்தார். ஆதம்பாக்கம் திரு. துரைசாமி ரெட்டி யார் அவர்கள் தலைவராக இருந்தார். நாங்கள் எதிர்க்கட்சிக்காரர். எங்கள் தலைவர் திருவொற்றியூர் சண்முகம் பிள்ளை அவர்கள். எங்களால் முடிந்த அளவு நாங்கள் கூட்டங்களில் ஈடுகொடுத்தோம். திரு. துரைசாமி ரெட்டியார் நல்லவராதலின் எங்கள் வேண்டுகோள்களையும் ஏற்று அவ்வப்போது வேண்டிய உதவிகளை எங்களுக்கும் செய்துவந்தார். எனவே எங்கள் பணி செவ்வையாக நடைபெற்றது. எனி-