பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

காட்டு வழிதனிலேவள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை
முள்ளுடைத் தாமரை

என்ற அடிகளிலே மருத நிலத்தின் நீர் வளம் சுரந்த பேரெழில் கொப்புளித்து நம் மனக்கண் முன்பு தெளிவாக நிற்கிறது.


ஆசிரியர் நத்தத்தனார் கையாளும் உவமைகள் மிகப் பொருத்தமாயும் அழகாயும் அமைந்திருக்கின்றன. மகளிர் கூந்தலைப் பற்றிக் கூறுமிடத்து அது, மெல்லியதாய் வீழ்ந்து தாழ்கின்ற மழையைப் போலிருக்கின்றது-அது விழிகு பெயல் அழகுகொள் கதுப்பு-என்கிறார் வாழைப் பூவெனப் பொலிந்த ஒதி யென்றும், பிடிக்கை அன்ன பின்னு வீழ் என்றும் கூந்தலை வெவ்வேறு வகையாக முடிப்பதைப் பற்றிக் கூறுகிறார். இளமங்கையரின் காலின் மென்மைக்கு நாயின் நாக்கை உவமிக்கின்றார். யாழின் நரம்புக் கட்டு நெகிழ்வதும் இறுகுவதும் கருங்குரங்கின் கையில் பிடிபட்ட பாம்பு அதன் கையைச் சுற்றி இறுகுவதையும் நெகிழ்வதையும் போன்றிருக்கின்ற தென்று சொல்லுகிறார். பைங்கண் ஊகம் பாம்பு பிடித்தன்ன, அங்கோடு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவு என்பது அவர் வாக்கு. மேலும், ஒட்டகம் துயில் மடிந்தன்ன வீங்குதிரை எனவும், எரிமறிந்தன்ன நாவின் பேய் மகள் எனவும், பாம்பு வெகுண்டன்ன தேறல் எனவும் ஏற்ற உவமைகளை ஆசிரியர் பயன்படுத்துவதை நோக்க நோக்க அவருடைய கவிதைத் திறன் நன்கு புலனாகின்றது.

யாழைப் பற்றி ஆசிரியர் கூறுகின்றபோது, அமிழ்தத்தைத் தன்னிடத்தே பொதிந்து துளிக்கும்