பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சிறுபானுற்றுப் படை 93 நரம்பு-அமிழ்து பொதிந்திவிற்றும் அடங்கு புரி நரம்பு-என்று எழுதுகிரு.ர். அதஞல், யாழின் சிறப்பை அவர் நன்குனர்ந்தவர் என்று தெரிகிறது. பாடுதுறை முற்றிய பயன் தெரி கேள்வி கூடு கொளின்னியம் குரல்குர லாக நூனெறி மரபிற் பன்னி என்று அவர் எழுதுவதிலிருந்து அவர் இசையறிவு வாய்ந்தவரென்பதையும் அறியலாம். சங்க காலப் புலவர்கள் இயற்கை அழகில் பெரிதும் ஈடுபட்ட உள்ளமுடையவர்கள். அவர்கள் கண்டு துய்த்த இயற்கைக் காட்சிகளைத் தங்கள் பாக்களில் மிக அழகாகப் பொறித்திருக்கிரு.ர்கள். நல்லூர் நத்தத்தனரும் இயற்கையில் திளைத்த உள்ள முடையவர். அவர் குறிஞ்சி நிலக் காட்சியொன்றை எவ்வாறு தீட்டுகிருர் என்பதைப் பார்ப்போம். மகளிர் கூந்தல்போன்ற அழகிய கலாபத்தை மஞ்சிடை விரித்து, மூங்கில் அசைந்தாடிக்கொண் டிருக்கும் மலையின் மேல் நின்று மயில் ஆடுகின்றது என்று அவர் கூறுகிரு.ர். மேலும் சிறுபாணுற்றுப்படையைப் படிக்கின்ற போது அதன் சொல்லாட்சியும், சொற்ருெடர் களும், பொருட் செறிவும் நமது உள்ளத்தைக் கவர் கின்றன. வயங்கிழை உலறிய அடி, வண்முகை யுடைந்து திருமுக மவிழ்ந்த தெய்வத் தாமரை, நாடா நல்லிசை, பைந் நனையவரை பவழங் கோப்ப, எயிற் கதவம் உருமுச் சுவல் சொறியும் என்பன