பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாரதி வாக்கு {{}3 நம் நாட்டிலே யந்திரத் தொழில் விருத்தியாக வேண்டுமென்பது பாரதியார் விருப்பம். "இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே யந்திரங்கள் வகுத்திடுவீரே" என ஏவுகின்ருர். ஆனல், அதே சமயத்தில் யந்திரத் தொழிலிளுல் மனிதனுக்கு ஏற்படும் தீங்கையும் எடுத்துக் கூறி எச்சரிக்கை செய்திருக்கிருர், "யந்திரத் தொழிற்சாலைகள் மனிதரை மிருகங் களுக்குச் சமானமாகச் செய்துவிடுகின்றன. காலே முதல் மாலை வரை ஒருவன் ஒரு மனையின் மேவிருத்து கொண்டு, நரக வாதனே போன்ற தீராத யந்திரச் சத்தத்தினிடையே, யந்திரத்திற்குள் கொஞ்சங் கொஞ்சமாகப் பஞ்சை நுழைத்துக்கொண்டிருந்து விட்டு சாயங்காலம் வீட்டிற்கு வந்தவுடன் குடித்து மதிமயங்கிக் கிடந்து மறுநாள் கால பொழுது விடியு முன்னே மறுபடி பஞ்சு போடப் போய்விடுகிருன். இவன் தன்னுடைய அறிவை விசாலப்படுத்தவும், தியானம் பூஜை முதலிய தெய்வ காரியங்கள் செய்யவும் நேரமெங்கே? எப்போதும் இடைவிடாமல் அவன் காதில் யந்திரத்தின் பேய்க் கூச்சலும் கண்முன் இரும்பும் பஞ்சும் மாருமல் இருப்பதால், அந்த மனிதன் நாளடைவில் மனிதத் தன்மை மாறித் தானும் ஒரு இரும்பு யந்திரம் போலாய்விடுகிருன்.” யந்திரத் தொழிலில் இன்றுள்ள குறைகளை நீக்கி அதை வளர்க்க வேண்டுமென்பதே அவர் கருத்து.