பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/106

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


104 காட்டு வழிதனிலே நம் நாட்டுச் செல்வவந்தர்களுக்கும் மடாதிபதி களுக்கும் 1917-ஆம் ஆண்டில் பாரதியார் ஒருவேண்டு கோள் விடுத்திருக்கிருர், அது இன்று பன்மடங்கு அவசியமாக இருக்கின்றது. அந்த வேண்டுகோளே நிறைவேற்ற அனைவரும் முன் வந்தால் உலகத்துக்கு தன்மையுண்டாகும்; மக்கட் கூட்டத்திற்கு நன்மை புண்டாகும். அவர் கூறுவதாவது: "இவ்வுலகத் திலே நாம் செய்கிற ஒவ்வொரு செய்கையையும் ஸ்வப் பிரயோஜனத்தைக் கருதாமல் ல்ோகோய காரத்தை முன்னிட்டுக்கொண்டு செய்யவேண்டும். தீராத ஆவலும், அவசரமும், ஓயாத பரபரப்பும் உள்ள ஜ்வர வாழ்க்கை நாகரிகமாகமாட்டாது. சரியான நாகரிகத்துக்குச் சாந்தியே ஆதாரம், யந்திரப் பீரங்கிகளும் சப்மரீன்களும் நாகரிகத்து அடையாளமல்ல. நிலக்கரிச் சுரங்கங்களும் ஆகாச வெடி குண்டுகளும் அபிவிருத்திக்கு லக்ஷணமல்ல. அவை மனுஷ்யனுக்குப் பலமல்ல, துணையல்ல. அவை மனிதனுக்குப் பகை. மனிதனையும் அவனுடைய நாகரிகத்தையும் அழிக்கும் குணமுடையன. கர்வத்தினலே மரணமுண்டாகும். அடக்கம், பொறுமை, ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மையான நாகரிகத்தையும் நித்திய ஜீவனையும் விளைவிக்கும். இப்படி நூற்றுக்கணக்கான ஹிந்து தர்மக் கொள்கைகளே நாம் உலகத்தார். கேட்க முழங்குவதற்கு இதுவே நல்ல தருணம். இந்தச் சமயத்தில் மனித சமூகம் அழிந்து போகாமல் அதைக் காப்பாற்றி நல்ல வழியிலே சேர்க்கக்கூடிய ஜாதியார் நம்மைத் தவிர வேறு யாரும் இல்லை." இவ்