பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#5 காட்டு வழிதனிலே எல்லா மனிதர்களும் சமமென்ற கொள்கை யைச் சமூக வாழ்க்கையில் நிறுவும்வரை மானிட ருள்ளே இகல், பொருமை, வஞ்சனை, போர் முதலியவை நீங்கமாட்டா என்கிருர் பாரதியார். உலகத்தில் இன்பம் நிலைக்கும் நெறியை இந்தியாவே நிலைநாட்ட முடியும் என்பது பாரதியா ருடைய நம்பிக்கை. காந்தி மகானுடைய கொள்கை களே பாரதமாதாவின் உபதேசம் என்றும், அவற் ருலேயே உலகத்திற்கு உய்வு ஏற்படும் என்றும் குறிப்பாகக் காட்டும் பாட்டு ஒன்றைப் பாரதியார் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துத் தந்திருக் கிருர். அதில் ஒரு பகுதி வருமாறு : வருக கத்தி, ஆசியா வாழ்வே, தரும விதிதான் தழைத்திட உழைப்பாய், ஆன்மா அதனுல் ஜீவனை யாண்டு மேனெறிப் படுத்தும் விதத்தினை யருளினய், பாரதநாட்டின் பழம்பெருங் கடவுளர் வீரவான் கொடியை விரித்து நீ நிறுத்தினுய் மானுடர் தம்மை வருத்திடும் தடைகள் ஆனவையுருகி அழிந்திடும் வண்ணம் உளத்தினில் நீகனல் உறுத்துவாய் எங்கள் காந்தி மஹாத்மா, நின்பாற் கண்டனம் மாந்தருட் காண நாம் விரும்பிய மனிதனை நின்வாய்ச் சொல்லில் நீதிசேர் அன்னை தன்வாய்ச் சொல்லினைக் கேட்கின்றனம் யாம் தொழுந்தா யழைப்பிற் கிணங்கி வந்தோம் யாம் எழுந்தோம், காந்திக் கீந்தோம் எமதுயிர். இவ்வாறு பாரதியாருடைய வாக்கினில் நாம் போற்றி மனத்திற் கொள்ளவேண்டிய உயர்ந்த கருத்துக்கள் பல இருக்கின்றன. அவற்றையெல்லாம் அறிந்துகொள்வது முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்,