பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புகழ் முடியுமா? 11 i வயலிலே புகுந்தது. வளம் சுரந்து கிடிந்ததால் யாருமே அதை வயலவிட்டு விரட்டி ஒட்டவில்லே. அது தன்னிச்சையாகக் கரும்புப் பயிர்களினிடையே சென்று அவற்றை ஒரு கலக்குக் கலக்கிற்று. பிறகு அங்கிருந்து வெளிப்போந்து ஒரு தடாகத்தினுள்ளே பாய்ந்தது. அங்கே குவளை மலர்கள் ஏராளமாக மலர்ந்திருந்தன. அவற்றை வேண்டியமட்டும் அருந் திற்று. கரும்பின் சுவை, குவளையின் சுவை எல்லாம் பார்த்தாகிவிட்டது. தடாகத்தில் நீராடியும் முடிந் தது. பிறகு ஒரு காஞ்சி மரச் சோலேயில் நுழைந்து நல்ல நிழலிலே படுத்துக் கவலையின்றித் துரங்கத் தொடங்கிற்று. இப்படிப்பட்ட செழிப்பு மிக்க கழனி சூழ்ந்த ஊரை உடையவனும் அந்த வள்ளல். பாட்டைப் பார்க்கலாம். செங்கண்மேதி கரும்புழக்கி அங்கண் நீலத் தலர் அருந்தி பொழிற்காஞ்சி நிழல்துயிலும் செழுநீர், நல்வயற் கழனியூரன் புகழ்தல் ஆளுப் பெருவண்மையனே. மேதி-எருமை. உழக்கி-மிதித்து. அங்கண்நிலத்தலர்அழகியகண்போன்ற குவளைமலர். ஆளு-அடங்காத. இது ஒரு பழம் பாடல். வஞ்சிப்பா என்ற வகையைச் சேர்ந்தது. ஆசிரியப்பா, வெண்பா ஆகிய இரண்டும் இக்காலத்திலும்கூட யாப்பு வழக்கில் இருக்கின்றன. கலிப்பா எப்பொழுதாவது அரிதாகப் புலவர்களின் முயற்சியால் உண்டாகிறது. ஆனால்,