பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்டு வழிதனிலே #3 கிருணுே தெரியவில்லை. அவனுடைய வெறுப்பும் தந்நலமும் வானில் எழுந்து பறக்கக்கூடிய உள்ளத் தின் சிந்தனை ஆற்றலைக் கூடக் கட்டுப்படுத்தி விடுகின்றனவே, என்ன விந்தை! இதை உணராத மனிதன், இயற்கையில் எங்கும் சுயநலந்தான் தாண்டவமாடுகிறது; விட்டில் பூச்சியை மைனுக் குருவி பிடிக்கிறது; மைனுவை வல்லூறு பிடிக்கிறது: வல்லுரறை இராசாளி பிடிக்கிறது-இவ்வாறு எங்கும் சுயநலந்தான்’ என்று பேசித் தன் அறிவின் திறமை யைப்பற்றிப் பெருமையடைந்துகொண்டு, தனது குறைகளையும் சிறுமைகளையும் ஒழிக்க முயலாது திரிகின்ருன். நம் உள்ளத்தை உயர்த்தி உலகமே ஒன்றென உணரும் பெரு நிலைக்குச் செலுத்தக் கூடிய பேராற்றல் இயற்கைக்கு உண்டென்பதை மனிதன் அறிந்துகொள்ள விரும்புவதில்லை. அவ னுக்குத் தனிமையின் இனிமை கசக்கின்றது. தனி மையின் மென்பேச்சு, இயற்கையின் வண்ணமறைச் சிறுகுரல் அவன் செவியில் விழுவதில்லை. இயற் கையில் திளைத்த கவிஞர்கள் அதை அறிந்து கூறி யிருக்கிருர்கள். அதை ஒவ்வொருவனும் தன் உள்ளத்தில் உணரும்படியாக இயற்கையோடு உற வாடுவதை உணவருந்துவது போன்ற முக்கியமான செயலாகக் கைக்கொள்ள வேண்டும். 'இயற்கை வாழ்விற்குத் திரும்பிப் போ” என்று பலர் அறிவுறுத்தியிருக்கிருர்கள். அதற்கு முதற் படியாக இயற்கையோடு தனிமையில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறு நாழியாவது உறவாடு என்று நான் கூறுகிறேன். அப்படி உறவாடும்போது வாழ்க்