பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


慧疆 காட்டு வழிதனிலே கைத் தொல்லைகள் அனைத்தையும் மறந்துவிட்டுக் கவிதையை மட்டும் மறவாதிருக்கவேண்டும். ஏனெனில் கவிதைதான் இயற்கைக் கன்னியோடு, நம்மைச் சேர்த்து வைக்கும் இன்பத் தோழியாகும். கவிதையும், காட்டுத் தனி வழியும் மனிதனை உயர்த்தும் ஆற்றல் வாய்ந்தவை. மக்களின் இன் றைய வாழ்க்கையில் எழுந்துள்ள இடர்ப்பாடுகளைக் களைந்தெறிவதற்கு இடையூருக நிற்கும் குறுகிய தந்தல நோக்கத்தை மாற்றிப் பரந்த மனப்பான்மை கொள்ள அவை உதவுகின்றனர். அவற்றை நாம் ஒரு நாளும் புறக்கணிக்கலாகாது. -