பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இளமை



ளமை ! அந்தச் சொல்லிலே ஒரு மந்திர சக்தி இருக்கிறது. அளவற்ற பலம், அளவற்ற நம்பிக்கை, கரை கடந்த உற்சாகம், அஞ்சா நெஞ்சம், மவர்ந்து வழியும் அழகு—இவற்றிற்கெல்லாம் இருப்பிடமானது இளமையல்லவா?

இளமை என்றவுடன் கவிஞனின் உள்ளம் பொங்குகிறது. அதன் மோகன சக்தியிலே கவிதை பெருக்கெடுத்தோடுகிறது; கலை தழைத்தோங்குகிறது. இளமையே கவிஞனுக்கு உயிர் கொடுப்பது; கலைஞனுக்கு அமுதாவது. இளமையே கற்பனையின் ஊற்று ; இளமையே எண்ணத்தின் உயிர்நாடி.

ஒரு நாட்டிற்கு ஒளி தருவது இளமை. இளமை மார்தட்டி ஆர்த்தெழுந்தால் ஆகாததும் உண்டோ? எந்த நாட்டு வரலாற்றை வேண்டுமானாலும் ஆராய்ந்து பாருங்கள். அந்த நாட்டு வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இளமையே முக்கிய காரணமாக இருந்திருக்கும். ஆயிரக்கணக்கான இளைஞர்களின் சேவையாலும், தியாகத்தாலுமே நாடு முன்னேற்றமடைகிறது.

இளமை கணக்குப் பார்க்காது. செயலில் இறங்குவதற்கு முன்பே இலாப நஷ்டத்தைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்காது; அதன் உள்ளத்தை