பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


#5 காட்டு வழிதனிலே % யலாம். ஆளுல், இந்த உயிர் இல்லாவிடில் அவள் வெறும் சடலந்தான். க வி ைத ப ன ங் கு க் கு அணிகள் பூட்ட எத்தனையோ பேர் காத்திருக்கிரு.ர்கள்; உயிர் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய மாருத ஆசை. அவளுக்கு நான் உயிர் கொடுக்க வேண்டும்; அவள் எனக்கு உயிர் கொடுக்க வேண்டும். நாங்கள் ஒன்ருகிவிட வேண்டும். இதுவே என் கனவு. "காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே' என்று பாரதி பாடுகிருன். கவிதைப் பெண் கடைக் கண்ணுற் பார்த்தாலும் போதும், அற்புதங்களெல் லாம் செய்ய நான் காத்திருக்கிறேன். முழு நிலாவின் வெண் கதிர் வீச்சிலே ஒருகானம் பிறக்கின்றதை நீ அறிவாயா? கவிதைத் தேவியின் அருள் கிடைத்தவர்களுக்கு அந்தக் கானம் கேட் கிறது. நீலக்கடலின் கொந்தளிப்பிலே அவர்களுக்கு வெள்ளிப்பனிவரையின் உச்சியிலே வைகும்.அமைதி தோன்றுகிறது: அழகுகளேயெல்லாம் வடித்தெடுத்துக்கொடுக்க, உயர்வுகளை யெல்லாம் மனக்கண் முன்பு நிறுத்திக் காட்ட, இன்பங்களை யெல்லாம் திரட்டி யளிக்க யாரால் முடியும்? அவளுடைய காதலைப் பெற்ற வனே அவற்றைச் செய்கிருன். அவனுடைய சொல் லிலே ஒரு மந்திர சக்தி குமிழியிட்டுக் கொண்டிருக்