பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

காட்டு வழிதனிலே

எனக்கு ஒன்றும் புரியவில்லை; அப்படியே திகைத்து நின்றேன்.

“என்னைக் கண்ணே என்றழைக்காமல் நயனமே என்றழைக்க விரும்புகிறாயா?” என்று அவள்

அவர் கருத்து எனக்கு விளங்கிவிட்டது. மேலும் அவர் கூறுகிறாள்:

“முதலில், என்னை உன் உள்ளத்திலே ஐக்கியப்படுத்திவிடு; பிறகு என்னால் பெற்ற இன்பத்தை மற்றவர்கள் உள்ளத்திலே தோன்றுமாறு செய். அதற்கான வாகனந்தானே வார்த்தைகள்? உயிருள்ள வாகனத்தில் ஏற்றி அனுப்பினால் நான் ஆசையோடு செல்லவேன். சவப் பெட்டியிலே என்னை அடைத்தனுப்ப முயலாதே உன்னுடைய முயற்சி பலிக்காது!”

நான் அவற்றிற்கு உயிர் கொடுக்க முடியாதா? என்று மிடுக்கோடு கேட்டேன்.

“நான் அவற்றை வாகனமாக ஏற்றுக் கொண்டால் உயிர் பிறக்கும். ஆனால் நீண்ட நாள் பயன்பட்டதால் சில வாகனங்கள் வலி குன்றி மங்கி விடுகின்றன. அவற்றில் எனக்கு விருப்பம் இல்லை” என்று அவள் பதிலுரைத்தாள்.

என் இறுமாப்பு மறைந்தோடி விட்டது. குதிரையைக் கொக்கென்று சொல்ல நான் பாடம் பண்ணியிருந்தேன். அதன் வலிமையால் கவிதையணங்கு என்னிடம் அடிபணிந்து வருவாள் என்று