பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கவிதை என் காதலி 23 எண்ணியதெல்லாம் பகற் கனவு என்பதை நான் உணர்ந்து கொண்டேன். தேவீ, எனது தவறுகளை யெல்லாம் நீ எடுத்துக் காட்டிவிட்டாய்; இப்பொழுது நான் உன்னிடம் சரண்புகுகின்றேன். என் உள்ளத்திலே வந்து நின்று நீயே இனிப் பேசு. உனது இனியகுரலுக்கு இசைவாக நான் சுதி கூட்ட முயல்கிறேன்” என்று பணிவோடு மொழிந்தேன். அவள் விழிக் கோணத்திலே நகை காட்டினுள். ஆஹா அந்த இன்முறுவலிலே நான் கண்ட இன் பங்களை யெல்லாம் எழுத வசமாகுமோ! இந்த உலகத்திலே கவிதைத் தேவி இல்லாத இடமில்லை. அவள் என் காதலி. அவளை நான் எங்கும் காண்கிறேன். காற்றில் அவள் மிதக்கிருள்; கடல் அலைகளிலே அவள் தாண்டவம் புரிகிருள். ானத்திலே அவள் நீலப்பட்டாடை நெளிகின்றது. எண்ணத்தின் இசையாக அவள் விளங்குகிருள். அவளுடைய முழு அன்பையும் பெறுகிறவர்களே பாக்கியம் செய்தவர்கள். அவளை நாடி உள்ளம் ஏங்குகிறது. ஒருகணம் அவள் உடனிருக்க இசைகி கிருள்; மறுகணத்திலே மாயமாக மறைந்து விடு கிருள்! அப்பொழுது உலகமே இருண்டு போகிறது. கவிதைத் தேவியின் அருளைப் பெறுவது எவ் வளவு கடினம் என்று தெரிகின்ற போதுதான் அவள் அருள் பெற்ற கவிஞர்களின் பெருமை புலனுகின்றது. ஹோம்ஸ் என்ற அறிஞர் எழுதுகிருர்: 'கற்ப காலத்