பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

காட்டு வழிதனிலே

தின் தூரக்குரல் கவிஞர்களின் நுட்பமான செவிகளில் இன்றே கேட்கிறது. மற்றவர்கள் நூறாண்டுகளுக்குப் பின் அறிந்து கொள்வதை அவர்கள் இன்றே அறிந்து சொல்லுகிறார்கள்.

கவிதைப் பெண்ணானங்கே. இது உன் செய்லல்லவா? உன்னை நான் போற்றுகிறேன். நீ தரும் இன்பம் சிலவேளைகளிலே என்னைச் சுடுகிறது; அனலைப் பிழிந்து நீஇன்பங் கூட்டுகிறாய். இருந்தாலும்

அது எனக்கு இனிக்கிறது. அதை நாடி நான் ஏங்கி நிற்கிறேன்; தேவீ, அருள் செய்ய வேண்டும்.