பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காந்திய அடிப்படை ச்ெசுநாதரை மையமாகக் கொண்டு எத்த னையோ அழகிய ஒவியங்கள் தீட்டப் பெற்றிருக் கின்றன. அவற்றில் ஒன்றிலே அவர் தம் கரத்தினிலே சுடர் விட்டுக் கொண்டிருக்கும் விளக்கைத் தாங்கிய வாறு ஒரு வீட்டை நோக்கி அன்போடு நிற்பது போலக் காட்சியளிக்கிரு.ர். வீட்டின் கதவோ சாத்தி உட்பக்கம் தாளிடப்பட்டிருக்கிறது. அந்த மகானிட மிருந்து வரும் ஒளியைப் பெற யாருமே கதவைத் திறந்து வெளி வரவில்லை. கிறிஸ்து முனி கருணை யோடுதான் காத்திருக்கிரு.ர். ஆனல் யாராவது அதைக் கவனிக்க வேண்டுமே! இந்த உயர்ந்த கற்பனையின் மூலம் ஒவியன் ஒரு பெரிய உண்மையை நமக்குக் காட்ட முற்பட்டிருக் கிருன். இறைவன் தனது அருளை வழங்கத் தயாராகத் தான் இருக்கிருன். அவனுடைய கருணைக்கு எல்லையே இல்லை. அவன் கருணைக் கடல். ஆனல், அந்த அருளைப் பெறுவதற்கு யார் நினைக்கிரு.ர்கள்? எல்லோருடைய மனக் கதவுகளும் சாத்தித் தாளிடப்பட்டுத்தான் கிடக்கின்றன. அத்திப் பூத்தது போல எங்காவது ஒருவர் இதற்கு மாருக இருந்தால் அவரையும் உலகம் புறக்கணித்து விடுகின்றது. அவருடைய பெருமையை உணரத் தொடங்கினலும் அதற்குள் ஓர் ஆயிரம் ஆண்டுகளாவது மறைந்தோடிவிடுகிறது,