பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காட்டு வழிதனிலே அன்று சிலுவையில் அறையப்பட்ட மகானின் பெரு மையை இன்றுதானே உலகம் ஒரளவிற்கு அறியத் தொடங்கி யிருக்கிறது! ஆணுல், அவருடைய உபதேசத்தை இன்றும் பின்பற்றுவதாகக் காணுேம். இந்தக் கணக்கின்படி பார்த்தால் இன்று உயிர்த் தியாகம் செய்த காந்தியடிகளின் பொன் மொழிகளில் பொதிந்துள்ள உயர்ந்த கருத்துக்களை உலகம் சரிவர உணர்ந்து கடைப்பிடிப்பதற்கு எத்தனை நூற்ருண்டுக ளாகுமோ? இவ்வாறு எண்ணிப் பார்க்கும்போது உள்ளத் திலே சோர்வும் கலக்கமுந்தான் மிஞ்சுகின்றன. மானிட சாதியின் மேல் ஒரு அவநம்பிக்கை, ஒரு கசப்பு ஏற்படுகின்றது. உலகம் இப்படித்தான் நெறி யில்லா நெறியிலே போய்கொண்டிருக்கும்; அதைப் பற்றி நினைத்து அங்கலாய்ப்பது தவறு; ஒவ்வொரு வனும் அவனவனுடைய கதிமோட்சத்தை நாடுவ திலேயே கண்ணுங் கருத்துமா யிருக்கவேண்டும்’ என்று கூறுகிறவர்களோடு நாமும் சேர்ந்து கொள்ள லாமா என்று தோன்றுகிறது. மானிட சாதிக்கு உய்வே இல்லை தான? இல்லை என்று சொல்லுவதற்கு மனம் இடங்கொடுப்பதில்லை. மானிட சாதி முன்னேறிக் கொண்டுதான் இருக் கிறது; வழியிலே அங்குமிங்குமாகச் சில சமயங்களில் தள்ளாடிக் கொண்டிருந்தாலும் அது இந்த உலகத் திலேயே சுவர்க்கத்தை அமைக்காமல் ஒய்வு கொள் ளாது என்று சாதிக்க வேண்டுமென்று ஆசை எழு கின்றது. "இது நாய் வாலப்பா, இதை நேராக்குவது