பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தி அடிப்படை

9

முடியவே முடியாது. யாராவது ஒரு மகான் தோன்றிக் கொஞ்சம் இதை நீட்டி நேராக்க முயல்வார். அவருடைய அருஞ் செயலால் உலகம் சற்று இப்படி, யப்படி நெளிந்து கொடுக்கும்; அந்த வலிமைக் கை மறைந்த பிறகு மறுபடியும் பழைய நிலைமைக்கே வந்து விடும்” என்று நம்பிக்கையற்றவன் பேசுகிறான். உலகம் போகிற போக்கைப் பார்க்கிறபோது அவனுடைய பேச்சு மெய் போலவே காண்கிறது.

மனிதன் அறிவு வாய்ந்தவன்தான். அவன் தன் அறிவின் ஆற்றலினாலே பெரிய பெரிய காரியங்களைச் சாதித்திருக்கிறான்; இயற்கையை வென்றிருக்கிறான்; பல அற்புதங்களைப் படைத்திருக்கிறான். இவை மட்டுமல்ல, மிக உன்னதமான எண்ணங்களை யெல்லாம் எண்ணியிருக்கிறான்; இன்பத்திற்கு வேண்டிய சாதனங்களையும், கருத்துக்களையும் அவன் கொண்டிருக்கிறான்.

ஆனால், அவனிடத்திலே ஒரு பெருங்குறை இருக்கிறது. தனியாக எண்ணும்போது, தனியாகச் செயல் புரியும்போது அவன் அடைகின்ற உச்சநிலையைப் பலராகக் கூடிச் செய்யும்போது அடைவதில்லை. அவனுடைய கூட்டெண்ணம், கூட்டுத் தொழில் தனிமையில் பெற்ற அதன் தரத்தை இழந்து விடுகிறது. தனி மனிதன் இழிந்தவை செய்வதும் எண்ணுவதும் இல்லையென நான் கூறவில்லை; ஆனால் மக்கள் கூட்டமாகச் சேர்ந்து நிற்கும்போது தனி மனிதன் பல சமயங்களில் அடையக்கூடிய உயர்