பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4ö காட்டு வழிதனிலே "இவர் இந்தத் தெருவில் வார்த்தை சொன்னுல் மூன்ருவது தெருவுக்குக் கேட்கும். பகலில் பள்ளிக் கூட வேலே முடிந்தவுடனே வீட்டுக்கு வந்து, சாயங்காலம் ஆறு மணி முதல் எட்டு வரை தன் வீட்டுத் திண்ணையில் சிநேகிதர்களுடன் பேசிக் கொண்டு, அதாவது கர்ஜனை செய்து கொண்டிருப் பார். பிறகு சாப்பிடப் போவார். சாப்பிட்டுக் கையலம்பி, கை ஈரம் உலர்வதற்கு முன்பு, மறுபடி திண்ணைக்கு வந்து சப்தம் போடத் தொடங்கி விடுவார். இவருடைய வீட்டுத் திண்ணேக்கு அக்கம் பக்கத்தார் இடிப் பள்ளிக்கூடம் என்று பெயர் வைத்திருக்கிருச்கள். அந்த இடிப் பள்ளிக்கூடத் துக்கு வந்து மாலைதோறும் நாலைந்து பேருக்குக் குறையாமல் இவருடைய பேச்சைக் கேட்டுக்கொண் டிருப்பார்கள். அந்த நாலைந்து பேருக்கும் இன்னும் காது செவிடாகாமலிருக்கும் விஷயம் அனேகருக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.” அந்த வாத்தியாருடைய பேச்சிலே சில வார்த் தைகளையும் கேளுங்கள் : "துருக்கி தேசம் தெரியுமா ? அங்கே நேற்று வரை ஸ்திரீகளே மூடி வைத்திருப்பது வழக்கம். கஸ்தூரி மாத்திரைகளை டப்பியில் போட்டு வைத் திருக்கிருர்களோ இல்லையோ? அந்த மாதிரி திறந் தால் வாசனை போய்விடும்.” எத்தனே தடவை படித்தாலும் சிரிப்புண்டா கிறது ; அதே சமயத்தில் நம்மை அறியாமல் அது நமக்குள்ளே மாறுதலைச் செய்கிறது.