பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாரதியின் நகைச்சுவை 4; நல்ல நகைச்சுவை உள்ளத்தில் சுருக்கென்று தைக்காது, நோவில்லாமலே குணம் கொடுக்க வேண்டும். மேல் நாட்டில் பல நகைச்சுவை எழுத் தாள்ர்களின் வார்த்தைகளே சமூகத்தில் பல சீர்திருத்தங்களை யாருக்கும் மனக் கசப்பில்லாமல் செய்திருக்கின்றன. அம்மாதிரியே பாரதியாரும் நகைச்சுவையைக் கையாண்டிருக்கிருர், ஹார் மோனியத்தைப் பற்றி அவர் எழுதியிருப்பதைப் பாருங்கள் : "அந்தப் பெட்டி (ஹார்மோனியம்) போடுகிற பெருங் கூச்சல்தான் என் காதுக்குப் பெரிய கஷ்ட மாகத் தோன்றுகிறது. மேலும், சங்கீதத்திலே கொஞ்சமேனும் பழக்கமில்லாதவர்களுக்கெல்லாம் இந்தக் கருவி யைக் கண்டவுடனே ஷோக் பிறந்து விடுகிறது. சத்தமுண்டாக்குவதற்கு நல்ல துருத்தி கைக்கு ஒத்ததாகப் பின்னே வைத்திருக்கிறது. ஒரு கட்டையை உள்ளே அழுத்தி, முன் பக்கத்துச் சாவிகளை இழுத்து விட்டு, துருத்தியை அசைத்தால், ஹோ என்ற சத்தமுண்டாகிறது. உடனே பாமர னுக்கு மிகுந்த சந்தோஷ முண்டாகிறது. நாம் அல்லவா இந்த இசையை உண்டாக்கினுேம் ? என்று நினைத்துக் கொள்கிருன். உடனே வெள்ளைக் கட்டைகளையும் கறுப்புக் கட்டைகளையும் இரண்டு தட்டுத் தட்டுகிருன். பேஷான தொனிகள்! மேலான தொனிகள் : பாமரன் பூரித்துப் போகிருன் ....... ஒரு வீட்டில் ஹார்மோனியம் வாசித்தால்