பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

காட்டு வழிதனிலே

வன், 'ஆறு மாதமென்று சொல்லடா' என்று திருத்திக் கொடுப்பான்."

பாரதியாருக்கும் அவர் மனைவிக்கும் நடந்ததாக ஞானரதம் என்ற நுாலில் வரும் பேச்சு இது:

" 'தலைநோவு பொறுக்க முடியவில்லை. கொஞ்சம் மிளகு அரைத்துக் கொண்டு வா' என்றேன். 'ஆமாம்; இரண்டு நாளைக் கொருமுறை இதொரு பொய்த் தலைவலி வந்துவிடும், என்னை வேலை ஏவுகிறதற்காக. பால்காரி வந்து மத்தியான்னம் பணம் கேட்டுவிட்டுப் போனாள். ராயர் வீட்டு அம்மாள் குடிக்கூலிக்கு ஞாபகப்படுத்தச் சொன்னான். தெருவிலே போகிற நாய்களுக்கெல்லாம் பணத்தை வாரி இறைக்கிறது; வீட்டுச் செலவைப் பற்றிக் கேட்டால் முகத்தைச் சுளிக்கிறது; இப்படிச் செய்து கொண்டே வந்தால், அப்புறம் என்ன கிடைக்கும்? மண்தான் கிடைக்கும்' என்று ஆசீர்வாதம் பண்ணிப் பிரசங்கத்தை முடித்தாள்.

" 'தலை நோவு தீர்ந்து விட்டது. நீ தயவு செய்து கீழே போகலாம்' என்று வணக்கத்துடன் தெரியப்படுத்திக் கொண்டேன்."

அவருடைய வணக்கத்திலே நகைச்சுவை பொங்கி எழுகின்றது.

'உல்லாச சபை' என்பது பாரதியார் எழுதிய ஒரு கட்டுரை. உல்லாச சபை என்று ஒரு சபை இருந்ததாம். அதிலே ஜிந்தாமியான் சேட், எலிக்குஞ்சு செட்டியார் முதலியோர்கள் அங்கத்தினர்கள். ஒரு நாள் உல்லாச சபையில் ஜிந்தாமியான் சேட்,