பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதியின் நகைச்சுவை

45


எலிக்குஞ்சு செட்டியாரை நாணயக் குறைவானவர் என்று சொல்லிவிட்டார். செட்டியாருக்குக் கோபம் வந்து விட்டது. அப்பொழுது நடந்த உரையாடலைக் கேளுங்கள்;

"எலிக்குஞ்சு செட்டியார்: நாணயக் குறைவா? யாருக்குங் காணும் நாணயக் குறைவு? சாஹப்! உம்முடைய முரட்டுக் குணங்களை நம்மிடம் காட்ட வேண்டாம் தெரியுமா?

"ஜிந்தாமியான் சேட்: செட்டியாரே, அதிக வார்த்தை பேசிவிட்டீர். ஒரு தரம் பொறுத்தேன். ஹோஷ்யார்! (ஜாக்கிரதை!)

"எலி : என்ன சாஹப் தாடியை உருவுகிறீரே, அடித்துப் போடுவீரோ?

"ஜிந்தா : ஹோஷ்யார்!

"எலி : நம்முடைய கடையிலே உம்மைப் போலவே நாலு முரடர்களை வேலைக்கு வைத்திருக்கிறேன். ஞாபகமிருக்கட்டும்.

"ஜிந்தா: ஹோஷ்யார்!

"எலி : என்னங் காணும் வெகு பயமுறுத்துகிறீரே, யாரென்று நினைத்தீர் நம்மை?

என்று சொல்லிக்கொண்டு எலிக்குஞ்சு செட்டியார் எழுந்து நின்று கையை ஓங்கினார்.

"சபையார் கலீரென்று சிரித்தார்கள்.

"ஏனென்றால், எலிக்குஞ்சு செட்டியார் 4 3/4 அடி உயரம்; ஜிந்தாமியான் சேட் 6 3/4 அடி உயரம். செட்டியார் 1 1/4 அடி அகலம்; சேட் 3 1/4 அடி அகலம். செட்டியாருக்கு வயது 55. சேட்டுக்கு வயது 33."