பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

காட்டு வழிதனிலே

அழகையும், உன்னி உன்னிப் பார்க்க அவை பெருகுவது புலனாகும்.

'தங்கா' சிறிய கவிதை தானே, அதை எழுதுவது எளிதாகத் தானிருக்கும் என்ற எண்ணம் நமக்குண்டகலாம். பொருட்செறிவில்லாமல், உயிர்த் துடிப்பில்லாமல் எழுதுவதனால் எளிதுதான். ஆனால், உயர்ந்த கவிதையாக மதிக்கப்படும் 'தங்கா' புனைவது உயர்ந்த வைரத்தைச் சாணை தீட்டி எடுப்பது போலக் கடினமானது. நிப்பான் கவி ஒருவன் கூறுகிறான்: "ஒரு கவி எழுதுவது புத்த மகானின் சிலை வார்த்தெடுப்பது போல அவ்வளவு அருமை வாய்ந்தது."

வேறெரு 'தங்கா'வின் சொற் செட்டையும், பொருட் செறிவையும், கவிதைப் பெருக்கையும் நோக்குவோம்.

எரிதனில் பொங்கும்
எழில் நனி பெருகும் பங்கயமே!
உனைப் போன்ற உயிரழகுக்
கன்னிகளைக் காணுங்கால்-நானோ

நெஞ்சம் புழுங்குகின்றேன்.

இதைப் பாடியவன் ஒரு பெண்மணி. ஐந்தாம் நூற்றாண்டிலே வாழ்ந்த யூர்யகு எனும் இளஞ் சக்கரவர்த்தி ஒரு சமயம் நாட்டு வளம் காணச் சென்றிருந்தான். அவன் மிவா நதியை அணுகிய போது அதில் துணி துவைத்துக் கொண்டிருந்த ஒரு பேரழகு கன்னியைக் கண்டான்; காதலித்தான். அதனால் அவளை பார் என்று வினவினான். கன்னியும், "ஐயனே, தான் அருகிலுள்ள ஊரில் வசிப்பவள்; என் பெயர்