பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


韃 காட்டு வழிதனிலே செலுத்தாமலிருந்து விட்டோம் என்று சொல்லுவது தான் பொருந்தும். பெண்மையை நன்கு வளர்க்க தாம அதனுலே உலகம் பெரியதோர் தீமையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது. காட்டு மிராண்டியாக வாழ்ந்த ஆதி மனிதனுக்கும் இன் றைய நாகரிக மனிதனுக்கும் உள்ள பெரிய வேறு பாடு என்னவென்ற கேள்விக்குப் பெட்னுட்ஷா ஒரு பொருள் பொதிந்த பதில் கொடுத்திருக்கிரு.ர். அவர் சொல்லுகிருர் ஆதிமனிதன் பிறரைக் கொல்ல நஞ்சு தோய்ந்த அம்பைப் பயன்படுத்தினுன்; இக்காலத்து மனிதன் நச்சுப் புகையைப் பயன்படுத்துகிருன். அவ்வளவுதான் வேறுபாடு. அவர் பேச்சு வேடிக்கை போலத் தோன்றினுலும் உண்மை நிறைந்தது. மனத் தன்மையிலே ஆதி மனிதனும் இன்றைய மனிதனும் ஒன்ருகத்தான் இருக்கிரு.ர்கள். விலங்கு உணர்ச்சி மாறி நெஞ்சிலே இன்னும் தண்மை அதிகம் வளர வில்லை என்பது அவர் கருத்து. உலகத்திலே ஒரு பெரிய கொடிய யுத்தம் முடிந்து இருபது ஆண்டுகள்கூட ஆகவில்லை. மற் ருெரு பயங்கர யுத்தம் வெடித்துவிட்டது. அதுவுந் தான் முடிந்து விட்டதே என்று கூறலாம். உலக சமா தானத்திற்கும், உலக ஒற்றுமைக்கும் ஐக்கிய நாடு களின் சங்கமும் பிறந்துவிட்டதே என்றுகூடக் கேட்கலாம். ஆனால், சண்டை முற்றிலும் ஒய்ந்து விட்டதென்று யாரும் கூற முடியாது. பல பாகங் களிலே அது புகைந்து கொண்டிருக்கிறது. எப் பொழுது அது பெரு நெருப்பாக மறுபடியும் ஓங்கி விடுமோ என்ற கவலை உள்ளத்தைப் பிடித்துக்