பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அடிகளின் தோற்றம் 65 கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகளின் சங்கத் தலைவர் அண்மையிலே பேசியிருப்பதைப் பார்த்தால் அந்தச் சங்கத்தினால் உலகத்தில் யுத்தம் வராமால் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. அதற்கு எதிராக மூன்ருவது உலக யுத்தத்தைப் பற்றிய பேச்சும் இன்று கேட்கின்றது. அணுக்குண்டு செய்வதிலும், அதை ஊழிக் கனலாகவே உரு வெடுக்கச் செய்வதிலும், நாடுகள் ஒன்ருேடொன்று போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன. அணுக்குண்டு ஆராய்ச்சியின் வேகம் நஞ்சுபோல ஏறிக்கொண்டிருக்கிறது. பல சிறந்த அறிஞர்கள் அதன் அச்சமூட்டும் விளைவைப்பற்றிப் பேசியுள் ளார்கள். எச். ஜி. வெல்ஸ், இனிமேல் மனித இனம் உலகில் வாழ முடியாது’ என்று சொல்லி விட்டுப் போய்விட்டார். அவர் கூறியதுபோலப் பல விஷயங்கள் நடந்திருக்கின்றன. இதுவும் அவ்வாறு நடக்காமல் இருக்கவேண்டுமே என்று சி ந் த னை யா ளர் சிலர் கவலைப்படுகிருர்கள். ஐன்ஸ்டைன் சொல்லுகிருர் அணுக்குண்டு யுத் தத்தால் மனிதக் கூட்டம் முழுவதும் அழிந்து போகாது; முக்கால்வாசி அழியலாம்; காடுகளிலும் மலைகளிலும் வசிக்கும் சாதியார்கள் மிஞ்சுவார்கள்.” 'இனிமேல் யுத்தம் என்ருல் துப்பாக்கி எடுத்துச் சுடவேண்டியதில்லை; ஒரு பொத்தானே அழுத்தினுல் போதும். உலகம் தவிடு பொடியாகிவிடும்' என்ற பேச்சு இன்று சாதாரணமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் வைத்துத்தான் காந்தி யடிகளின் தோற்றத்தை நாம் எண்ணிப் பார்க்க