பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காட்டு வழிதனிலே


ரண்டு செயல்களிலே எனக்கு அளவு கடந்த விருப்பமுண்டு. நல்ல கவிதைகளைப் படிப்பது ஒன்று; தனியாக உலாவச் செல்வது மற்றொன்று. இரண்டையும் ஒரே காலத்தில் சேர்த்துச் செய்ய முடியுமானால் அது எனக்குப் பாலில் தேன் கலந்து ஒன்றாய்க் கிடைத்தது போல.

அந்திநேரத்திலே இளஞ் சோளப் பயிர்கள் மெதுவாகக் காற்றிவே ஒல்கி அசைந்து பசுமையான அலைகள் எழுந்தாடுவதுபோல அழகிய காட்சியளித்து இன்பத்தில் ஆழ்ந்திருக்கும்போது தோட்டங்களின் வழியாகத் தனிமையிலே சென்றால் வாய் தாகைவே ஏதாவது ஒரு கவிதையை முணுமுணுக்க தொடங்கி விடுகிறது. தனிமைக்கும், இயற்கைக்கும், கவிதைக்கும் என்னவோ நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இயற்கை வெளியிலே கிடைக்கிற தனிமைக்கு அத்தனை கவர்ச்சி இருக்க முடியுமா? அந்த இடத்திலே கவிதையானது இதழ் அவிழ்ந்த முல்லையின் மணம் போலத் தானாகவே தோன்ற முடியுமா?

மாடுகளைப் புலத்திலே மேய விட்டுவிட்டு மர நிழலிலே அமர்ந்து அவற்றைக் கவனித்துக்கொண்டிருக்கும் சிறுவன்கூட ஏதோ. ஒரு நாடோடிப் பாடலைப் பாடத் தொடங்குகிறான். அவனையும்