பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

காட்டு வழிதனிலே

அடிகள் செய்த அரும்பணி. அதிலே ஒரு சிறிய பகுதி தான் இந்திய விடுதலை, உலகத்திலே அமைதி நிலவ வேண்டுமானால் எல்லா நாடுகளும் சமமாக இருக்க வேண்டும். அடிமைக்கும் ஆண்டானுக்கும் இடையிலே சகோதரத்துவம் வளர முடியாது. உலகம் ஒரு குடும்பமாக இன்புற்று வாழவேண்டுமானால் இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் முதலில் மறைய வேண்டும். அதனாலேயே காந்தியடிகள் இந்திய விடுதலையில் தமது சேவையை ஆரம்பித்தார்.

காந்தியடிகளின் உபதேசம் புதியதல்ல. அவர் அதை வாழ்க்கையில் எல்லாத் துறைகளிலும், அரசியலிலும் புகுத்தி வெற்றி கண்டதுதான் புதுமை. பாரதத்தின் பண்பாட்டிலே ஊறித் தெளிந்தது அவருடைய சத்திய நெறி. அதை உலகிற்கு எடுத்துக்கூற நமக்கு அதிக உரிமையுண்டு. ஆனால், அந்த உரிமைக்கு முதலில் நாம் பாத்திரமாக வேண்டும். காந்தியத்தை முதலில் நாம் கைக்கொள்ள வேண்டும். தமக்குள்ளே பூசலையும் பிரிவினையையும் வளர்த்துக்கொண்டு உலகத்திற்கு அன்பு நெறி உபதேசம் செய்ய இயலாது. காந்தியடிகள் காட்டிய நெறியிலே தாம் நிலைத்து நிற்கவேண்டும். நமக்குள்ளே இருக்கும் குறுகிய எண்ணங்களையும், வெறுப்புக்களையும் ஒதுக்கவேண்டும். அவ்வாறு செய்வதே பிறருக்கு நல்ல எடுத்துக்காட்டாக அமையும். அதனால் உலகத்தை ஒரு குடும்பமாகப் பிணைத்துவிடலாகும். விமானத்திலேறி உலகத்தை ஓரிரு நாட்களில் சுற்றி வருவதால் மட்டும் உலகம்