பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/73

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மதம் தேவையா ? ን) அது கடவுளின் கட்டளைக்கு மாறுபட்டது ' என்று மதத்தின் பெயரால் கூறப்படுகிறது. தாழ்ந்த நிலையிலே இருக்கும் ஒருவனை உயர்த்தலாமென விரும்பினுல், அது அவன் விதி, அவனை உயர்த்து வதற்கு நீ யார்?' என்ற பேச்சு மதத்தின் பெயரால் எழுகிறது. இவற்றை யெல்லாம் காணும்போது வளர்ச்சியிலே ஆர்வமுள்ளவர்களின் உள் ள ம் பொங்குகின்றது. இந்த மதத்தையே அழித்து விட்டால் என்ன என்று அவர்களுக்குக் கோபம் பிறக்கின்றது. - ருவியா நாட்டிலே மதத்தின் பெயரால் நடந்த அநீதிகளைக் கண்டு புரட்சித் தலைவர்கள் சீறினர்கள். பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த யாரும் எம் மதத்தையும் பின்பற்றக் கூடாது என்று தடை விதித் தார்கள். அவர்களை நாஸ்திகர்கள் என உலகமெலாம் துாற்றியதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தம் கொள்கைகளைப் பின்பற்றினர்கள், ஒரு புதிய சமூ கத்தை உண்டாக்கினர்கள். அச் சமூகத்தைப் பழித் தும், அதில் மக்களுக்குச் சுகமே இல்லையென்றும் வேறு நாடுகளிலே தீவிரமாகப் பிரசாரம் நடந்தது ; மதக் கு ரு க் க ள் மார் இதில் உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டார்கள். பொதுவுடைமைக் காரர்களை அரக்கர்களெனவும், அவர்கள் செய்யும் ஒகாடுமைகளைத் தாங்காது மக்கள் அலறிக்கொண் டிருக்கிருர்களெனவும் புத்தகங்களும், பத்திரிகை களும் எடுத்தோதி மக்களைப் பயமுறுத்தின. ஆனால், இரண்டாவது உலக மகாயுத்தம் உண்மையை வெளி யாக்கிவிட்டது. ருஷிய மக்கள் அனைவரும் உலகமே