பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

காட்டு வழிதனிலே

சுகமும் நன்னெறியில் நிற்பதாலேயே ஏநிற்படுகின்றதென்றும் அறிவுறுத்தி அதன் மூலம் மேலே எடுத்துக் காட்டிய ஆங்கிலப் பெரியார் எதிர்பார்க்கும் பயன்களைப் பெறலாமே என்றும் அவர்கள் கேட்கலாம். இவ்வாறு செய்தால் குருட்டு நம்பிக்கைகளும் உயர்வு தாழ்வுகளும், மூடப் பழக்க வழக்கங்களும், சமயப் பூசல்களும் ஒழிந்து விடுமல்லவா என்றும் அவர்கள் வினவலாம்.

நன்னெறியைக் கடைப்பிடித்து நிற்கும்படி அறிவுறுத்துவதனால் இன்றுள்ள ஏற்றத் தாழ்வுகளைப் போக்கிவிடலாம்; அதனால் வாழ்க்கையில் பல வசதிகளும் சுகமும் கிடைக்கும்படி செய்யலாம் ; அதில் ஐயமில்லை. ஆனால், அதற்காக மதத்தைப்புறக்கணிக்க வேண்டிய தேவையில்லை. மதம் அதற்கு முட்டுக்கட்டையல்ல. மதமும் அதையே செய்ய முயல்கின்றது. அதுமட்டுமல்ல, இந்த நன்னெறிப்போதனை செய்யாத வேறொரு முக்கியமான காரியத்தையும் மதம் செய்ய முயல்கின்றது. நன்னெறிப் போதனையானது உலக வாழ்க்கையோடு நின்றுவிடுகின்றது. மதம் அதற்கு மேலும் செல்லுகின்றது. உலக இன்பத்தையே முடிவாகக்கொண்டு வாழ்க்கை நடத்தினால் மக்கள் என்றும் மனநிறைவு பெறவே முடியாது. அவர்கள் எதிர்பார்க்கும் இன்பத்திற்கு ஒரு எல்லை வகுக்கவும் இயலாது. உலக இன்பத்தின் இயல்பே ஆசையைப் பெருக்குவதுதான். ஆதலால், மக்கள் அனைவரும் தமது சுகத்திலேயே கண்ணாக இருக்கத் தொடங்கினால் அதில் மனநிறைவு பெறாமல் ஏங்கவும், அதன் பயனாகத் தன் நலத்தையே பெரிதாக