பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதம் தேவையா?

79


யைக் காட்டும் நெறியென்றும், அதைப் பின்பற்றா விடில் மனக்கவலை மாற்றல் அரிது என்றும், சடங்குகள் முதலானவைகள் மதத்தில் நிலையான முக்கிய பகுதிகள் அல்லவென்றும், அவற்றில் காணப்படும் குறைபாடுகளை அவ்வப்போது களைந்துவிட்டு மதத்தைப் பின்பற்ற வேண்டியது சிறந்த முறை என்றும் நாம் அறியவேண்டும். மேல் நாடுகள் விஞ்ஞானம் முதலிய சாதனங்களைக் கொண்டு உலக இன்பத்தை நாடின; கீழ்நாடுகள் தத்துவ விசாரணையில் நின்று ஆன்மிக வளர்ச்சியை நாடின. இரண்டிலுமுள்ள சிறப்பியல்புகளின் சேர்க்கையிலேதான் உலகம் இன்பமடைய முடியும்.