பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/82

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மாலைப் பொழுதினிலே சிரேலென்று வந்த சிறு தூறல் அடங்கிவிட்டது. மரங்கள் மட்டும் இலை துணியில் கோத்துவைந்திருந்த முத்துப்போன்ற துளிகளை இன்னும் சொட்டிக் கொண்டிருக்கின்றன. பச்சைக் கி வளி ெயா ன் று கீச்சிட்டு இலைகளிடையே பாய்கின்றது. அதனல் ஏற்பட்ட அசைவிஞலே திபுதிபுவென்று வேகமாக முத்துச் சொட்டுக்கள் விழுந்து எனக்குப் பன்னீர் தெளிக்கின்றன. காக்கைகளும் மைனுக்களும் நனைந்த சிறகுகளை உலர்த்திக் கோதி அழகு செய்து கொண்டே ஏதேதோ உற்சாகமாக உரையாடு கின்றன. எங்கும் ஒரே புதுமை உணர்ச்சி பொங்குகிறது. பகலெல்லாம் கதிரவனின் வெம்மையில் வாடியதால் உண்டான சோர்வுக்கு மாலையிலே திடீரென்று வீசிய காற்றும், பிறகு அது அடங்கி வீழ்ந்த துளிகளும் மாற்ருக வந்தன. சோர்வு நீங்கிப் புதிய உற்சாகம் எங்கும் கொப்புளித்துக்கொண்டிருக்கிறது. எங்கும் ஒரு புது இளமை. எங்கும் ஒரு புது வனப்பு. தண்ணெனப் பெய்த மாரியில் ஆடி இயற்கையானது களைப்பு நீங்கிக் கொம்மாளம் அடித்துக் கொண் டிருக்கிறது. வானத்தை மூடியிருந்த மேகப்படாமும் எப் படியோ சட்டென்று மறைந்துவிட்டது. ஆங்காங்குப்