பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

காட்டு வழிதனிலே


அதனுடைய குரல் எத்தனை துாரந்தான் கேட்குமோ! வெகு தொலைவிலிருந்து அன்பு கனிந்த பதில் குரல் வந்தார். பக்கத்திலே எனக்கும் ஒரு துணை இருந்தால் இன்னும் நன்று இருக்குமே என்ற எண்ணம் எப்படியோ உதயமாயிற்று.

என் மனமறிந்து உற்ற துணையாகத் தனி வழியிலே வரக்கூடியவள் ஒருத்திதான் உண்டு. இயற்கை தரும் இன்பத்தையும் அறிவையும் பன்மடங்கு பெருகும்படி செய்ய வல்லவள் அவள். அவள் தான் கவிதைக் கன்னி. அவளுடைய காதலைப் பெற்று விட்டவர்கள் பாக்கியசாலிகள் என்பது என்னுடைய கருத்து. உலாவப் போகும்போது தனியாகச் செல்லவேண்டும். கவிதைப் பெண்ணின் காதலும் வாய்த்திருந்தால் இந்தத் தனிமையைவிட இன்பம் பயப்பது வேறொன்றும் இல்லை. அவளும் தனிமையிலேயே நம்முடன் உறவாடப் பெரிதும் விரும்புகிறாள். அந்த நிலையிலே தான் நானும் அவள் காதலைப் பெற்றேன்.

பேச்சுக் கிடமேதடி-நீ

பெண்குலத்தின் வெற்றியடி

என்று நான் வாய்விட்டுப் பாடிக்கொண்டே நடந்தேன்.

ஓரிடத்தில் ஆடுகள் கும்பலாக மேய்ந்தன. ஒரு கல்லின்மேல் வயது முதிர்ந்த இடையன் ஒருவன் உட்கார்ந்து புல்லாங்குழலில் இசை பொழிந்து கொண்டிருந்தான். சாதாரணமான தெம்மாங்கு