பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாலைப் பொழுதினிலே

85

ருக்கும் இன்பம் பொதுவாக ஏற்பட வேண்டுமென்றும் அவன் அறிவு சொல்லுகிறது. அதை அடைய அவன் செய்யும் முயற்சியில்தான் வழி தவறிச் சென்று முட்டி மோதிக்கொண்டு இடர்ப்படுகிறான். அவன் மட்டும் இந்த இயற்கையிலே கிடைக்கும் சாந்தியை அவ்வப்போது உலர்ந்தும் துய்க்கப் பழகிக் கொண்டால் அவனுடைய உன்னத நோக்கம் நல்ல முறையிலே, இன்ப வழியிலே வெகு விரைவில் கைகூடிவிடும்" என்று நான் இப்படி ஆழ்ந்து எண்ணிக்கொண்டே நடந்தேன். அதனால் இடையனைக்கூட மறந்துவிட்டேன். "போய் வருகிறேன்" என்று ஒரு சொல்லாவது கூறலாமொன்று திரும்பிப் பார்த்த போது தொலைவிலே அந்த இடையன் பழையபடி கல்லில் மேல் அமர்ந்திருப்பது தெரிந்தது. மறுபடியும் அவன் குழல் ஊதத் தொடங்கிவிட்டான். அதன் இனிய நாதம் காற்றில் மிதந்து வந்து என் காதில் தேன் பாய்ச்சியது. இடையனோடு ஆடுகளும் அமைதியில் மூழ்கிக் காட்சியளித்தன.

அந்த இடையனைச் சந்தித்தது நல்லதாயிற்று. அவனுடைய வாழ்க்கையும் அவ்வாடுகளின் வாழ்க்கையைப் போலவே மாறுதல் அறியாதது. இருப்பினும் அதிலே உள்ள சாந்தியை ஓரளவிற்காவது பெற முடியுமானால் பரபரப்பும் வேகமும் நிறைந்த நகர வாழ்க்கையில், நிலைத்துள்ள மக்களுக்குப் பெரிதும் நன்மை உண்டாகும். நாட்டுப்புறங்களிலே, காட்டு வெளியிலே படிந்துள்ள அமைதி நகரத்தில் ஏது? அதை இழந்துவிட்டால் வாழ்க்கையில் வேறு

6