பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


$6 காட்டு வழிதனிலே என்ன இருந்தும் இல்லாதது போலத்தான். இன்பத் தையும் வசதிகளேயும் முன்னேற்றத்தையும் தேடி எவ்வளவு முயன்ருலும் இயற்கை தரும் அமைதி இல்லாதவிடத்து முழு வெற்றி கிடைக்காது. மேலும் திறந்த காட்டு வெளியினிலே தனியாகக் கால்போன போக்கில் திரியும்போது வாழ்க்கையிலே கசப் பூட்டும் சிறிய செயல்கள் மறந்து போகின்றன; உள்ளம் விரிந்து உயரப் பறக்கின்றது. அதன் பயனகப் பிறக்கும் அமைதியும் தெளிவும் இயற்கையோடு தனித்து உறவாடியவர்களுக்குத் தான் தெரியும். இவ்வளவு பெரிய இன்பத்தைப் பெற மக்கள் அனைவரும் முற்படவேண்டும் என்ற ஆர்வத் தோடு நான் அந்த மாலைப் பொழுதிற்கு நன் செலுத்தித் திரும்பினேன். -