பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மௌனப் பெரும் பேச்சு


ழ்ந்த உணர்ச்சி ஒன்று உள்ளத்திலே பொங்கி எழுகின்றது. அழகையெல்லாம் வடித்தெடுத்து உருவாக்கியது போன்ற அழகு ஒன்று கண் முன்பு தோன்றுவது அதற்குக் காரணமாக இருக்கலாம். எல்லையற்ற இன்பமோ அல்லது துன்பமோ அதை விளைவித்திருக்கலாம். காதலென்னும் தேன்நெருப்பு அந்த உணர்ச்சியின் அடிப்படையாக நிற்கலாம். காண்டற்கரிய இறைவனுடைய தோற்றங் கண்டு பெற்ற பரவச நிலையிலே அது கிளர்ந்தெழலாம். இவ்வாறு பலவேறு நிலைகளில் தோன்றும் ஆழ்ந்த உணர்ச்சிகளை ஒருவன் தன் உள்ளத்தில் உணருவது. போன்றே பிறரும் முழுமையாக உணருமாறு செய்ய முடியுமா? எவ்வகையிலாவது பிறருக்கு எடுத்துக் காட்ட இயலுமா? ஓரளவிற்கு இது சாத்தியமாகலாம். ஆனால், அந்த அளவிற்கு ஓர் எல்லையுண்டு. அதற்கு மேலே ஆழ்ந்த உணர்ச்சிகளை உள்ளத்தால் உணரலாமே யன்றி முற்றிலும் எடுத்துரைப்புதென்பது இயலாத செயல். அணி அணியாக ஆயிரம் ஆயிரம் அலைகள் எழுந்து சுருண்டு முல்லை மலர் நிகர்க்கும் வெண்ணுரை மகுடம் தாங்கிக் கரையில் மோதும் நீலக்கடலின் காம்பீரியத்தையும், விண்ணில் முட்டி வெள்ளிப் பனிமுடி சூடி அசைவில்லாத மோனத் தவத்திருக்கும் இமயப் பெருமலையின் சாந்தியையும், கோடி கோடிப் பொற்கிரணக்