பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


88 காட்டு வழிதனிலே கைகளை நீட்டி உலகத்திலுள்ள எல்லாப் பொருள் களையும் தழுவிப் புத்துயிர் கொடுத்துத் தகதக வென்று மேலே கிளம்பும் இளங் கதிரவனையும், வெண்மதுக் கதிர்களால் நிலவுலகைச் சொக்கி மயக்கிப் புன்னகை பூத்துத் தழைக்கும் தண்ணில வையும், குழந்தைச் சிரிப்பினில் குழையும் இனிப் பையும், மாருக் காதல் வெற்றியெய்துங் காலத்தில் பிறக்கும் களிப்பையும் துய்ப்பதுபோலப் பிறருக்குக் கூற முடியுமா? அடைய முடியாததை அடைந்த இன்பம்-பிரியமுடியாதவர்களைப் பிரிந்த துன்பம்இவற்றைப் பேச முடியுமா? இன்ப வாரிதியாகிய இறைவனைக் கலந்த நிலையில் உதிக்கும் உயரின் பத்தைச் சொல்லில் சிறைப்படுத்தலாகுமா? இவற்றையெல்லாம் கலைஞன் மற்றவர்களைவிட துட்பமாக உணர்வதோடு தன் அற்புத வல்லமை யில்ை பிறருக்கும் தோன்றும்படி செய்ய முயல் கின்ருன். அவனுடைய முயற்சிக்கு ஒய்வே இல்லை. ஆதிமனிதன் தன் உணர்ச்சிகளைப் பலவகையான ஒலிகளால் வெளிப்படுத்த முயன்ருன்; குகைகளில் படம் வரைந்து காண்பிக்க விரும்பினன். அன்று முதல் இந்த முயற்சி நடந்துகொண்டே யிருக்கிறது. ஒவ்வொரு பெருங்கலைஞனும் ஒவ்வொரு துறையில் அவ்வுணர்ச்சிகளை எடுத்துக்காட்ட ஆர்வங்கொள்ளு கிருன், சிற்பி கல்லிலே வடிக்கப்பாடுபடுகிருன். ஒவியன் வண்ணங்களிலே கட்டிப் பிடிக்க முயல் கிருன். இசை வாணன் நாதத்திலே எட்டிப் பிடிக்கப் பார்க்கிருன். கூத்தன் அவிநயத்திலே மின் னும்படி செய்ய முயல்கிருன். கவிஞன் சொல்லிலும்