பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/96

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


懿 காட்டு வழிதனிலே பொருள்களும் பரிசிலாகப் பெற்றுத் திரும்புகிருன். வழியிலே அவன் வேருெரு பாணனைச் சந்திக்கிருன். அந்தப் பாணனும் வறுமையால் வாடித் துயர் ஆற்றுப்படுத்த விறலியர் கூட்டம் குழப் பாலே நெடு வழியில் வருந்தி வந்தான். அவனுடைய நிலையைக் கண்டு பரிசில் பெற்று வந்த பாணன், நீ பரிசில் பெற விரும்புவாயாயின், வஞ்சியும் மதுரையும் உறந்தையும் தரும் செல்வம் வறிதென்று தோன்றும் படி, ஏழு வள்ளல்களின் வள்ளன்மையும் தான் ஒருவனே தாங்கி நிற்கும் ஒய்மானுட்டு நல்லியக் கோடனிடம் செல்லுக' என்று வழிப்படுத்து கின்முன். போகும் வழியிலே முதலில் அவனுடைய எயிற் பட்டினத்தில் மனதோறும் மீன்சூட்டுடன் உபசரிக்கப் பெறுவாய். கேணியிற் பூத்த பூவே முருகப் பெருமானது கை வேலைப் போல வெற்றி கொடுத்த வேலூரிலே புளிங்கறியிட்ட சோறும், ஆமானிறைச்சியும் அன்புடன் வழங்கப் பெறுவாய். அந்தணர் சுருங்காத அவனது ஆமூரிலே ஞெண்டு கலந்த உணவை உழத்தியர் விருப்புடன் அளிப் பார்கள். அங்கிருந்து நல்வியக் கோடனது முதுரர் அண்மையிலேயே உள்ளது. அவனுடைய அரிய காவலையுடைய கோபுர வாயில் பொருநருக்கும் புலவருக்கும் அந்தணருக்கும் என்றும் திறந்திருக் கின்றது. அதைக் கடந்து சென்று பல்மீன்நடுவண் பால்மதிபோன்று வீற்றிருக்கும் நல்லியக்கோடனை யணுகி, முதியோரை வணங்கும் கையாய் என்றும், "இளையோர்க்கு மலர்ந்த மார்பாய் என்றும், உழவ ருக்கு நிழல் செய்யும் செங்கோலாய் என்றும், பகை