பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


96 காட்டு வழிதனிலே அறிவுடையோர் குழுவில் அறிவு நன்கு உடையவன்; பரிசிலருக்குத் தரமறிந்து கொடுப்பவன்; வரையாது கொடுப்பவன்' என்று இவ்வாறு கவிஞர் அவனைப் புகழ்ந்து பாடுகிருர், மேலும் அவர் தம் வறுமை நிலையை உள்ளத்தை உருக்கும் வகையில் திறம்பட எடுத்துரைக்கிருர், "எங்கள் வீட்டு நாய் தான் ஈன்ற கண் விழியாத இளங் குட்டிகள் முலையுண்ணுதலைப் பசி மிகுதியால் பொறுக்கமாட்டாது குரைத்துக்கொண்டு எங்கள் அடுப்பிலே படுத்திருக்கும்; கறையான் அரித்துக் கொண்டிருப்பது எங்கள் அடுப்பு: காளான் பூத்தது எங்கள் அடுப்பு” என்று அடுப்பை வர்ணிக்கிருர் நல்லூர் நத்தத்தனர். திறவாக் கண்ண சாய்செவிக் குருளை கறவாப் பான்முலே கவர்த ைேளுது புனிற்று நாய் குரைக்கும்...... காழ்சோர் முதுசுவர் கணச்சித லரித்த பூழி பூத்த புழற் காளாம்பிப் புல்லெ னட்டில் என்கிரு.ர். அடுப்பிலே நெருப்பிட்டு எத்தனை நாட்க ளாயினவோ! என்ருவது ஒரு நாள் நெருப்பிட் டாலும் அவருக்கு உணவுப் பொருளாகக் கிடைப்பது குப்பையில் முளைத்துக் கிடக்கும் வேளைக்கீரையே யாகும். அதை உப்பின்றி வேகவைத்து, பிறர் கண்டால் நகைப்புக் கிடமாகுமென்று அஞ்சி வாயிலடைத்துத் தம் சுற்றத்தாருடன் உண்பாராம். - குப்பை வேளை உப்பிலி வெந்ததை மடவோர் காட்சி நாணிக் கடையடைத் திரும்பே ரொக்கலோ டொருங்குடன் மிசையும்.